Switch to
   
   
   
செய்தி
  • Photo
கனேடிய தமிழ் இளையோர் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ தேசியக்கொடி முன்மொழிவும், தொடர் விழிப்புணர்ச்சி நிகழ்வும்
[ திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 08:36.22 AM GMT +05:30 ]
உலகெங்கும் பரந்து வாழும் தமிழரனான எமக்கு தமிழீழத் தேசியக் கொடியே எமது வரலாறு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான தியாகங்களை எடுத்தியம்புகின்றது. இத்துடன் ஓர் நாட்டின் தேசியச் சின்னங்களானவை அந்நாட்டின், அந்த நாட்டு மக்களின், அரசியல் அபிலாசைகளைக் குறித்து நிற்கும்.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலகெங்கும் வாழும் அனைத்து மக்களும் தமது நாட்டுக்கென, தம்மை பிரதிநிதிதுவப்படுத்தும் தனித்துவமான கொடிகளைக் கொண்டுள்ளார்கள்.

இவ்வாறாக நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடிகளுக்கு வழங்கப்படும் மரியாதையே அந் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் மரியாதையாகக் கருதப்படும்.

உலகெங்கும் பரந்து வாழும் தமிழரனான எமக்கு தமிழீழத் தேசியக் கொடியே எமது வரலாறு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான தியாகங்களை எடுத்தியம்புகின்றது.

இத்துடன் ஓர் நாட்டின் தேசியச் சின்னங்களானவை அந்நாட்டின், அந்த நாட்டு மக்களின், அரசியல் அபிலாசைகளைக் குறித்து நிற்கும்.

காலம் காலமாக தமிழீழ மக்கள் தொடர்ச்சியாக அந்நிய சக்திகளால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவ் அந்நிய சக்திகளால் தமிழ் மக்களின் தேசிய இறையாண்மை தொடர்ச்சியாக நசுக்கப்பட்டு வந்தது. யாழ் பேரரசின் முடியாட்சி போர்த்துக்கேயரால் சிதைக்கப்பட்டபோது நந்திக் கொடியை தமிழர்கள் இழந்து நின்றனர்.

பின்னர் வன்னி இராச்சியம் தனது வாள் பொறிக்கப்பட்ட கொடியை பண்டார வன்னியன் மன்னனது தோல்வியோடு இழந்தது. இவாறான அன்னிய அடக்குமுறைப் போர்களால் தமிழர்களது கொடியும் அவர்களது பாரம்பரிய தேசியச் சின்னங்களும் இழக்கப்பட்டு, தொடர்ந்து அவர்களது வரலாற்றிலிருந்தும் அழிக்கப்பட்டது.

தமிழீழரின் தேசியக்கொடியானது தமிழ் மக்கள் தம் பாரம்பரிய தாயகமாம் தமிழீழத் தேசியத்தின் மேற்கொண்டுள்ள அபிலாசைகளை எடுத்துக் காட்டுகின்றது. தமிழீழத் தமிழர் அனைவருமே தமது விடுதலைக்காக பாடுபட்ட மாவீரை நினைவூட்டும் தமிழீழக்கொடியை அவர் மனதில் வைத்து போற்றுகின்றனர்.

கனேடிய தமிழ் இளையோர் அமைப்பினால் கார்த்திகை 1 ம் திகதியன்று பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்களின் நினைவு நாளையொட்டி தமிழீழக் கொடி முன்மொழிவும் தொடர் விழிப்புணர்ச்சி நிகழ்வுகளும் ஆரம்பிக்கப்பட்டன.

தேசியக் கொடியின் கீழ் அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் ஈழத் தமிழர்கள் உலகுக்கு தமது அரசியல் அபிலாசைகளை ஆணித்தரமாக எடுத்துக் கூறியுள்ளனர். எமது தமிழீழக் கொடியை முன்மொழியும் இத் தொடர் விழிப்புணச்சி நிகழ்வின் மூலம் ஈழத் தமிழர்கள் உலகுக்கு தனித் தமிழீழமே தீர்வு என எடுத்துக் கூறவுள்ளனர்.

இன்றைய நினைவு தினத்தில் இவ் முன்மொழிவு நிகழ்வும் ஒவ்வொரு தமிழனும் தனது தமிழீழத் தேசியக் கொடியை முன்மொழியக் கூடியவாறு பிரத்தியோக இணையத்தளமும் மாவீரர் குடும்பத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்களது நினைவுதினமான இன்று, அவரின் மற்றும் அனைத்து தியாகிகளின் வேட்கையான தமிழீழத்தை, எம் தமிழீழக் கொடியை மற்றும் தேசியச் சின்னங்களை அனைத்து தமிழரும், இளையோரும் எமது பாரம்பரியக் சின்னங்களாக முன்மொழிந்து எற்றுக்கொண்டனர்.

இத்தொடர் நிகழ்ச்சியில் அனைத்து உலகத் தமிழரையும் பங்குபெறுமாறு கனேடிய இளையோர் அமைப்பு வேண்டுகின்றது.

 

 

 

 

 

 

 

 

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement