|
|
|
| சரத் பொன்சேகாவை தேவையற்ற விதத்தில் விசாரணை செய்தால் கடும் நடவடிக்கை: ஜே.வி.பி. தலைவர் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை |
| [ திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 02:45.04 AM GMT +05:30 ] |
 சரத் பொன்சேகாவின் கிரீன் காட், வதிவிட அனுமதியை நீடிப்பதற்காக சாதாரண விசாரணைகள் நடத்தப்படலாம்.ஆனால் தேவையற்ற வகையில் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். |
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் சரத் பொன்சேகாவை விசாரணை செய்வதற்கு அமெரிக்காவுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என அவர் கோரியுள்ளார்.
இதேவேளை 30 வருட பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில்,இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை ஜே.வி.பி எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவையற்ற வகையில் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - சோமவன்ச தேவையற்ற வகையில் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக நட்பு நாடுகளுடன் இணைந்து உயிரைப் பணயம் வைத்து போராட்டங்களை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க குடியுரிமைப் பெற்றுக் கொள்வதற்காக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பில் எவ்வித சிக்கல்களும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அதற்கு மேலதிகமாக மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஏதாவது விசாரணைகள் நடத்தப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவிடம் வேறும் விடயங்கள் பற்றி கேள்விகளை எழுப்புவதற்கு அமெரிக்காவிற்கு எவ்வித உரிமையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகா மட்டுமன்றி அரசியல் தலைவர்கள் மற்றும் படை அதிகாரிகளுக்கு எதிராக எந்தவொரு நாடேனும் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் அதற்கு எதிராக ஜே.வி.பி கடுமையான நடவடிக்கை எடுக்க ஒருபோதும் பின்நிற்காதென அவர் தெரிவித்துள்ளார்.
|
|
|
|
|
| காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்! |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ] |
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்] |
| சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல் |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ] |
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்] |
| சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ] |
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர் ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்] |
| பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ] |
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்] |
| தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு |
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] [ ] |
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|