அளவ்வ, புதிய வீதியைச் சேர்ந்த கயான் ராஜபக்ஷ எனும் சிங்கள இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
இவர் மாத்தளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான நிமல் மெதிவக்க தகவல் தருகையில் கூறியதாவது:-
மாத்தளை, அலுவிகாரை பிரதேசத்தில் இரகசிய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலொன்றின் போது குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.
இவர் இணையத்தளத்தினூடாக ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரைத் தகாத வார்தைகளால் பேசியுள்ளார் என்று கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் பேரிலேயே கைதானார் என தெரிவித்தார்.
|