|
|
|
| ஐரோப்பிய ஒன்றியத்தின் காலக்கெடுவுக்கு இலங்கை சாதகமான பதில் |
| [ சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 03:54.13 AM GMT +05:30 ] |
ஐரோப்பிய ஒன்றியம், இலங்கைக்கு விதித்திருந்த காலக்கெடுவுக்கு அமைய, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பதிலளித்துள்ளது. இந்தப் பதில் நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகல்லாகமவினால் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. |
ஆடை உற்பத்தி தொழில்துறைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பாகவே இந்த மனித உரிமை மீறல் தொடர்பான விளக்கம் இலங்கையிடம் கோரப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தாம் ஐரோப்பிய ஒன்றியம் எழுப்பியிருந்த கேள்விக்கு உரிய பதில்களை வழங்கியுள்ளதாக மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தாம் தொடர்ந்தும் பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில் இலங்கைக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து இலங்கையின் பதிலை தாம் பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் பேனாட் சேவேஜ், வரிச்சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் இந்த மாத இறுதியில் தீர்மானத்தை எடுக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நம்பிக்கையான தரப்புகளின் தகவல்படி, இலங்கை அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டு அதற்கான உரிய விசாரணைகளை மேற்கொள்வதாக தமது அறிக்கையில் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|