|
|
|
| சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு இரண்டாம் கட்ட கடன் உதவியை வழங்கியுள்ளது |
| [ சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 03:46.46 AM GMT +05:30 ] |
இலங்கையின் பொருளாதாரத்தை மீளமைக்கும் பொருட்டு தமது இரண்டாம் கட்ட நிதி யுதவியை சர்வதேச நாணய நிதியம் விடுவித்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் நேற்று வாஷிங்டனில் வெளியாகியுள்ளது.
|
இதன்படி இலங்கைக்கு 329.4 மில்லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளன. நிலையான இரண்டாம் கட்ட கடன்தொகை ஏற்பாடான 658.8 மில்லியன் டொலரின் கீழேயே இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி முகாமைப் பணிப்பாளர், டொகாடோசி காடோ தெரிவித்துள்ளார். இலங்கையின் அண்மைக்கால பொருளாதார வளர்ச்சிப்போக்கு திருப்திகரமாக உள்ளது. அவசியமான மீளமைப்பு திட்டங்கள் உரிய வகையில் பின்பற்றப்பட்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே இந்த தொகையை வழங்கத் தாம் இணங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மொத்தமாக இலங்கைக்கான தமது கடன் திட்டத்தை, கடந்த ஜூலை மாதத்தில் தொடங்கியது. அன்று முதல் இலங்கை அரசாங்கம் தமது பொருளாதாரத்தில் பாரிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக பொதுமக்களுக்கான மானிய குறைப்பு, சம்பள அதிகரிப்பின்மை உட்பட்ட விடயங்கள் இதில் அடங்குகின்றன. 2010 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பிக்காது கணக்கு அறிக்கையை மட்டும் இலங்கை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தமையும் இதில் ஒரு காரணமாகும். இந்தநிலையில் இலங்கையின் நாடாளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்திற்கு அமைய வரவுசெலவுத்திட்டத்திற்கு பதிலாக கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அது நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே சர்வதேச நாணய நிதியம் தமது கடனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
|
|
| காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்! |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ] |
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்] |
| சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல் |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ] |
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்] |
| சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ] |
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர் ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்] |
| பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ] |
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்] |
| தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு |
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] [ ] |
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|