|
|
|
| உயர் படையதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் சட்ட சிக்கல் காணப்படுகின்றது: பிரதமர் |
| [ சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 03:23.23 AM GMT +05:30 ] |
இலங்கையின் உயர் படையதிகாரிகளுக்கு வாழ் நாள் முழுவதிலும் பாதுகாப்பு வழங்குதில் சட்டச் சிக்கல் காணப்படுவதாக பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். |
உயர் படையதிகாரிகள் ஓய்வு பெற்றதன் பின்னர் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் அரசியல் சாசன பிரச்சினை எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பிரச்சினை தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சட்ட மா அதிபர் இந்தப்பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் புதன்கிழமை அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தளபதிகள் மற்றும் ஏனைய உயர் படையதிகாரிகளுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். உயர் படையதிகாரிகளுக்கு வாழ் நாள் முழுவதிலும் பாதுகாப்பு வழங்குமாறு ஜே.வி.பி விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு குறைக்கப்பட மாட்டாது என பிரதமர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
|
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|