Switch to
   
   
   
செய்தி
அமெரிக்காவின் போர்க்குற்ற அறிக்கையை ஆராய ஐவர் கொண்ட குழு ஜனாதிபதியினால் நியமனம்
[ சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 04:15.53 AM GMT +05:30 ]
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சமர்ப்பித்துள்ள, இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை ஆராயும் பொருட்டு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று ஐந்து பேரைக்கொண்ட நிபுணர்கள் குழுவை நியமித்துள்ளார்

இதற்கு ஜனாதிபதியின் சட்ட நிபுணர் டி எஸ் விஜேசிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்களாக சட்டத்தரணி நிஹால் ஜயமான்ன, முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.சி. சில்வா சட்டத்தரணி திருமதி மனோ ராமநாதன் மற்றும் ஜெசீமா இஸ்மாயில் ஆகியோர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை மனித உரிமைகள் துறை அமைச்சர்,மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து ஆராய்வதுடன் குற்றச்சாட்டுக்களின் தன்மை குறித்து ஆய்வு செய்வதுமே இவர்களின் பணியாகும்.

இவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தமது ஆய்வு அறிக்கையை ஜனாதிபதிக்கு ஒப்படைக்கவேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளும் அரசாங்கமும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டு அடங்கிய அறிக்கையே அமெரிக்க காங்கிரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement