|
|
|
| நாடு முழுவதிலும் பௌத்த தூபிகளை அமைப்பதில் பயனில்லை: ரணில் விக்ரமசிங்க |
| [ சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 03:34.04 AM GMT +05:30 ] |
 பௌத்த மதக் கோட்பாடுகளை பின்பற்றி நாட்டை நல்லவழியில் ஆட்சி செய்யாது நாடு முழுவதிலும் பௌத்த தூபிகளை அமைப்பதில் பயன் எதுவுமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். |
இந்த நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் செயற்பாட்டை ஜனாதிபதி இன்னமும் சரியான முறையில் மேற்கொள்ளவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மிஹிந்தல ரஜ மஹா விஹாரையில் நடைபெற்ற விசேட சமய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் வாழும் சகல இனத்தவர்களையும் ஒன்றிணைக்கும் முக்கிய கடமை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை எனவும், இந்த நிலைமை நீடித்தால் மீண்டும் நாட்டில் பிரிவினைவாதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டை எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பது குறித்து பௌத்த மதம் தெளிவாக விளக்கியுள்ளதாகவும், இந்தக் கோட்பாடுகளை தற்போதைய ஆட்சியாளர்கள் பின்பற்றத் தவறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனநாயகத்தை கட்டியெழுப்பி, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக் கூடிய ஓரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி என அவர் தெரிவித்துள்ளார்.
|
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|