Switch to
   
   
   
செய்தி
யுத்தம் முடிந்த பின்னரும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது நியாயமானதல்ல: சபையில் சம்பந்தன்
[ சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 02:31.24 AM GMT +05:30 ]
யுத்தம் முடிவுக்கு வந்து விட்ட பின்னரும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது நியாயமானதல்ல. இதனை யாரும் நியாயப்படுத்தவும் முடியாது. யுத்தம் முடிந்து விட்டதால் அவசரகாலச் சட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

சர்வதேச சட்டங்களுக்கு முரணாகவே மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் நாட்டில்  நல்லாட்சியோ, ஜனநாயக ஆட்சியோ, நாகரிகமான ஆட்சியோ நடைபெறவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. யுத்தம் முடிந்துள்ள நிலையில் பிரேரணையை நீடிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உள்ளூர், சர்வதேச சட்டதிட்டங்களுக்கு முரணாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உறவினர்களோ, ஊடகவியலாளர்களோ, அன்றேல் மக்கள் பிரதிநிதிகளோ பார்க்க இயலாது. அவர்களை பார்வையிடுவதற்கான அனுமதியும் வழங்கப்படுவதில்லை.

இடம்பெயர்ந்து வாழ்பவர்களுடன் எந்த தொடர்பையும் ஏற்படுத்த முடியாத நிலைமையே இருக்கின்றது. இவை உள்நாட்டு, வெளிநாட்டு சட்ட திட்டங்களுக்கு முரணாகவே இருக்கின்றன. அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அமெரிக்கா, இந்தியா உட்பட சர்வதேச சமூகம் கோரி நிற்கின்றது. அத்துடன், ஐ.நா.வும் ஏகமனதாக கேட்டுக்கொண்டுள்ளது.

முகாமில் இருக்கின்ற மக்கள் தங்களுடைய சொந்த தீர்மானங்களை தாங்களே எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். உறவினர்களுடன் சேர வேண்டுமா? நண்பர்களுடன் சேர வேண்டுமா? என்பதை அவர்களே முடிவு எடுக்க வேண்டும்.

இடைத்தங்கல் முகாம்களில் இருந்து கொண்டே உடைந்த தமது வீடுகளை திருத்திக் கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்கலாம். அவர்கள் அங்கு மீண்டும் தொழில் வாய்ப்புகளை ஆரம்பிக்கக்கூடும். அந்த உரிமை மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் அனுபவிக்கும் உரிமை அந்த மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில மாதங்களுக்குள் அந்த மக்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. வாக்குரிமையானது இறைமையின் ஓர் அங்கமாகும்.

வவுனியாவிலுள்ள முகாம்களை விடவும் இடைத்தங்கல் முகாம்களின் நிலையானது மிகமோசமானது என்பதனால் மக்களை தடுத்து வைத்திருப்பது உகந்தது அல்ல.
சாதாரண மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை அந்த மக்களும் அனுபவிக்க வேண்டும்.

மிருகங்களை போல தடுத்து வைக்கப்பட்டிருப்பதனை ஏற்கமுடியாது. இதுவே சர்வதேசத்தின் முறைப்பாடாக இருக்கின்றது. இடம்பெயர்ந்தவர்களுக்கு 5000 ரூபாவும் உணவுப் பண்டங்களும் பொருட்களும் வழங்கப்படுகின்றன. ஏனைய உதவிகள் வழங்கப்படுவதில்லை. கௌரவமாக வாழ்ந்தவர்கள் இன்று அகதிகளாக்கப்பட்டுள்ளனர். உழைக்கும் மார்க்கத்தை இழந்துவிட்டனர் என்பதானல் மார்க்கங்களை ஏற்படுத்தி கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

சர்வதேச தொண்டு நிறுவனங்களை சுதந்திரமாக அப்பகுதிகளுக்கு செல்வதற்கு அனுமதியளிக்க வேண்டும். அவர்களின் உதவிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அவர்கள் செல்வதை தடுக்க வேண்டாம்.

இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் உதவிகளை வழங்கியுள்ளன. பல நாடுகள் வழங்குவதற்கு முன்வந்துள்ளன. இவர்கள் அரசாங்கத்திற்கு உதவுவதற்கு முன்வரவில்லை, மக்களுக்கே வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளில் எந்த வேலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை என்று அறிகின்றேன். அவற்றை செய்யாவிட்டால் உதவிகளே கிடைக்காமல் போகும்.

ஜனாதிபதி 50 வீதம் வாக்குகளைப்பெற்று ஆட்சியிலிருக்கின்றார். கூட்டமைப்பில் 22 உறுப்பினர்கள் இருக்கின்றோம். நாம் கூறுவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதில்லை.

இங்கு நாகரிகமான ஆட்சியோ, நல்லாட்சியோ, ஜனநாயக ஆட்சியோ இடம்பெறவில்லை என்பதனாலும் யுத்தம் நிறைவடைந்து விட்டமையினாலும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதனை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

இதேவேளை, 10 ஆயிரம் பேர் முதல் 15ஆயிரம் பேர்வரை விசேட தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியாமல் உறவினர்கள் தவிக்கின்றனர்.

எனவே, விசேட தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள் தொடர்பான விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் அது அரசாங்கம் செய்யும் பாரிய குற்றமாகும். என்றார்.
 
    
  
 

 


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement