|
|
|
| அமெரிக்கா சென்று வந்ததும் பொன்சேகாவுக்கு இரு படையணிகள் பாதுகாப்பு |
| [ சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 02:12.28 AM GMT +05:30 ] |
அமெரிக்கா சென்று போர்க்குற்ற விசாரணைகளை நிராகரித்துவிட்டு இலங்கை திரும்பிய முப்படைகளின் பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு இப்போது இராணுவத்தின் இரண்டு படையணிகள் பாதுகாப்பு வழங்குகின்றன. இது அவருக்கு கிடைத்திருக்கும் அதிஷ்டம் என்று கூறப்படுகிறது. |
அமெரிக்காவில் இருந்து வியாழக்கிழமை கொழும்பு திரும்பிய ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு பாதுகாப்பிற்காக இரண்டு வெவ்வேறு படையணிகள் நேற்று பாதுகாப்பில் ஈடுபட்டன.
"சிங்க ரெஜிமன்ட்'' படைப்பிரிவில் பணிபுரிந்த ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு இது வரைகாலமும் சிங்க ரெஜிமன்ட் படையணியினரே பாதுகாப்பு வழங்கிவந்தனர்.
அவர் அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் இராணுவத் தளபதியின் கீழ் இயங்கும் விசேட படையணியினரும் அவரது பாதுகாப்பிற்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து சிங்க ரெஜிமன்ட் படையணியினர் தமது முகாமிற்கு செல்ல முடிவு செய்தனர்.
எனினும் அவர்களைச் செல்லவிடாது தமது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடருமாறு பொன்சேகா உத்தரவிட்டார். |
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|