|
|
|
| செல்வம் அடைக்கலநாதன் எம்.பிக்கு ஒரு மாதகால தடுப்புக்காவல் உத்தரவு |
| [ சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 01:56.16 AM GMT +05:30 ] |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஒரு மாத காலத் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். |
கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக வெளிநாட்டில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடந்த புதன்கிழமை நாடு திரும்பியிருந்தார். அவரிடம் விமான நிலையப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை விசாரணைக்காக அவரை அழைத்தனர். 8 மணிநேரம் நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் அவர் இருப்பிடம் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
மீண்டும் நேற்று வெள்ளிக்கிழமை காலை விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர் காலை 8 மணியளவில் அங்கு சென்றவேளை தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார் என அறியமுடிகின்றது.
அண்மையில் வவுனியா ரெலோ அலுவலகத்தில் "மைக்ரோ பிஸ்ரல்" ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் விசாரிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. |
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|