One moment please..
 
செய்தி
நாம் உணர்ந்துகொள்ளத் தவறும் படகுத் தமிழர்களின் துயரம்: பாரிஸ் ஈழநாடு
[ செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 01:14.08 PM GMT +05:30 ]
சிங்கள இனவாதக் கொடூரங்களிலிருந்து தப்பிப்பதற்கு தற்போது ஈழத் தமிழர்களுக்கு எஞ்சியுள்ள ஒரே வழி கடல் கடந்து செல்வது மட்டுமே. 1983 கறுப்பு ஜுலைக்குப் பின்னரான இந்தக் கடல் கடக்கும் முயற்சிகள் பல பரிதாபகரமான முடிவுகளையும் எமது உறவுகளுக்குத் தேடித் தந்துள்ளது.

அந்தக் கொடூரம் இன்றுவரை தொடர்ந்தே வருகின்றது. பாக்கு நீரிணையில், இத்தாலிக் கடலில் என்று தொடர்ந்த இந்தச் சோகங்கள் தற்போது அவுஸ்திரேலியக் கடற்பகுதியிலும் அரங்கேறி வருகின்றது.

மரணமே வாழ்வாகிப் போன மனிதர்களாக ஈழத் தமிழர்கள் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள கடல் கடந்து சென்றாலும் அவலங்களும் மரணங்களும் அவர்களைத் துரத்தியே செல்கின்றது.

சிறு கடல் தொலைவில் நான்கு கோடி தமிழர்கள் வாழும் தமிழகம் அரவணைக்க மறந்ததாலும், அழிவுகளுக்குத் துணை போனதாலும் ஆழ் கடலையும் எதிர் கொண்டு நீள் பயணம் மேற்கொள்ளும் எமது உறவுகளுக்காக வேதனைக் குரல்கூட தமிழகத்தில் ஒலிப்பதாகக் காணவில்லை.

ஆனாலும், உயிரை விடவும் மானமே பெரிதாக எண்ணும் ஈழத் தமிழர்கள் உலகெங்கும் படகிலும் மிதக்கின்றார்கள். கடலிலும் மிதக்கின்றார்கள்.

தரை மார்க்கமான தப்பித்தல் என்பது முடியாத காரணத்தினால் கடல் கடந்து தமிழகம் சென்றவர்கள் தவிர, மேலும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் விமானம் மூலமாகப் பயணித்து, பெருந் துயர் சுமந்து ஐரோப்பா, கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா நாடுகளில் தஞ்மடைந்தார்கள்.

தற்போது அந்தப் பாதைகளும் தமிழர்களுக்கு அடைக்கப்பட்டு, இலங்கையின் ஒரே சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க விமான நிலையம் இறுதித் தமிழனையும் சிறைபிடித்து, சித்திரவதைகள் செய்வதற்கான கொடூர கூடாரமாக மாற்றம் பெற்றுவிட்டது. இதனால், ஈழத் தமிழர்கள் உயிர் வாழ்தலுக்காகக் கடல் கடந்தேயாக வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே உள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பேரவலங்களின் பின்னர் எதிர்கால நம்பிக்கைகளைத் தொலைத்த மனிதர்களாக மாறிவிட்ட ஈழத் தமிழர்களுக்கு இலங்கைத் தீவில் வாழ்தல் என்பது மரணத்திலும் கேவலமாகவே போய்விட்டது.

வவுனியா முள்வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்ட வன்னி மக்களில் பலர், 'இறுதிப் போர்க்களத்திலாவது இறத்துபோயிருக்கக் கூடாதா?' என்று சோகப் பெருமூச்சு விட்டு, தம் அவலங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஈழத் தமிழர்களின் இறுதி நம்பிக்கையான புலம்பெயர் அகதி வாழ்வும் தற்போது அச்சுறுத்தல்களுக்குள்ளாகி வருகின்றது. அண்மையில் கடல்கடந்து அவுஸ்திரேலியா நோக்கி 258 ஈழத் தமிழர்கள் பயணம் செய்த படகொன்று இந்தோனேசிய கடற்படையினரால் தடுக்கப்பட்டு, மெராக் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 11-ம் திகதி முதல் இந்தோனேசிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தப் படகில் 32 குழந்தைகள், 27 பெண்கள், 4 வயோதிபர்கள், 195 ஆண்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் இடம்பெற்று ஒரு வாரம் கழிந்த நிலையில் அவுஸ்திரேலிய கடற் பகுதியில் வைத்து அவுஸ்திரேலிய சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட படகு ஒன்றில் பயணித்த 78 தமிழர்களும் மீண்டும் அவுஸ்திரேலியாவின் 'ஓசியானிக் விக்கிங்' என்ற கப்பலில் ஏற்றப்பட்டு இந்தோனேசியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த இரு படகு அகதிகளையும் தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று அவுஸ்திரேலிய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்தப் படகுகளில் இருப்பவர்களோ தம்மை அவுஸ்திரேலிய அரசு ஏற்காவிட்டாலும், தாம் ஐ.நா. அகதிகள் பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ள எந்த நாட்டிற்காவது சென்று வாழத் தயார் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த இரு படகுகளிலும் பயணித்தவர்களை மனிதாபிமானம் மிக்க நாடுகள் ஏதாவது ஏற்க மறுக்கும் பட்சத்தில் இந்தோனேசிய அரசு அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் முடிவை மேற்கொள்ளக்கூடும்.

அப்படி அவர்கள் அனைவரையும் இலங்கைக்கு அனுப்ப இந்தோனேசிய அரசு முடிவு செய்யுமானால், கொடூரமான இனவெறிச் சிங்கள அரசின் கைகளில் மரணிப்பதை விட, அந்த அகதித் தமிழர்கள் நடுக் கடலில் தமது வாழ்வை முடித்துக் கொள்வதைத் தவிர வேறு மார்க்கமே இல்லை.

இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை இரவு அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற படகு ஒன்று அவுஸ்திரேலிய வடமேற்கு கடற்பரப்பில் கொக்கஸ் தீவுக்கு அருகே கடலில் மூழ்கியுள்ளது. 40 இற்கும் மேற்பட்ட அகதிகள் பயணம் செய்த இந்த மூழ்கிய படகிலிருந்து 17 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளனர். இதில் பலியானவர்கள் பெரும்பாலும் ஈழத் தமிழர்கள் என்றே நம்பப்படுகின்றது.

இத்தனை அவலங்களும் எமது உறவுகளுக்கு நேர்ந்து கொண்டிருக்கும்போது நாம் அது பற்றிய எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமலேயே உள்ளோம். முள்ளிவாய்க்கால் அவலங்களுக்குப் பின்னர் எமது உணர்வுகள் மரத்து விட்டது போலவே தோன்றுகிறது.

ஆனாலும், ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் அத்தனை அவலங்களுக்காகவும் குரல் கொடுக்கக் கூடிய நிலையிலும், போராடக் கூடிய சூழலிலும் புலம்பெயர் தமிழர்களாகிய நாமே உள்ளோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கரையேறத் தவிக்கும் தமிழர்களின் கண்ணீர் துடைக்க எம் கரங்களை நீட்ட வேண்டும்.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்