One moment please..
 
செய்தி
கொலைசெய்யப்பட்டது தமிழ் இளைஞன் என்பதால் நியாயமான விசாரணை இடம்பெறுவது சந்தேகம்
[ செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 09:35.22 AM GMT +05:30 ]
பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் இளைஞரொருவர் அடித்துக் கொல்லப்பட்டமை பொலிஸ் அராஜகத்தின் உச்சக்கட்டம். இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் இலங்கை கொலைகார நாடாக மாறிவிடும் என்று ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இச் சம்பவத்தில் கொல்லப்பட்டது தமிழ் இளைஞன் என்பதால் நியாயமான விசாரணைகள் நடைபெறுவதென்பது சந்தேகமான விடயமென்றும் அவர் குறிப்பிட்டார்.

பம்பலப்பிட்டி கடற்கரையில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு, கடலில் தள்ளிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே எஸ்.
பி. திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், நாளுக்கு நாள் பொலிஸாரின் அராஜகங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அங்குலானையில் இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். அதற்கு முன்பும் பல சம்பவங்கள் இடம்பெற்றன.

இன்று மனநோயாளியான இளைஞர் ஒருவர் கையெடுத்துக் கும்பிட்ட போதும், ஈவிரக்கமின்றி பொது மக்கள் பார்த்துக்கொண்டிருக்கையில் மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்டு கடலில் தள்ளிக் கொல்லப்பட்டுள்ளார்.

எனவே, இக்கொலை தொடர்பாக நீதியான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். கொல்லப்பட்டது தமிழ் இளைஞன் என்பதால் நீதியான விசாரணைகள் நடத்தப்படுமா என்பது சந்தேகமே. ஆனால், இதற்கு இடமளிக்கலாகாது.

அனைவரும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். அமைச்சர்கள் தமது தவறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸாரைப் பயன்படுத்துகின்றனர். இதனால், குற்றமிழைக்கும் பொலிஸாரைப் பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது.

பொலிஸார் சிலர் அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுகின்றனர். இதனால், அவர்கள் குற்றமிழைக்கும் பட்சத்தில் பாதுகாக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, எந்தப் பயம் இன்றி கொலைகள், தாக்குதல்கள் என்பன பட்டப்பகலில், அதுவும் பொதுமக்கள் முன்னிலையில் இடம்பெறுகின்றன.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், நாடு முழுவதும் கொலைக் கலாசாரம் தலைதூக்கும். அதன் பின்னர் நாட்டில் ஒழுக்கமுள்ள, நீதியான சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியாது போகும்'' என்றார்.




செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்