One moment please..
 
செய்தி
(2ம் இணைப்பு)
ஆஸி கடலில் படகு விபத்தில் காணாமல் போயுள்ள இலங்கைத் தமிழர்களை தேடும் நடவடிக்கை தொடர்கிறது: இதுவரை மூவரின் சடலம் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 04:05.53 PM GMT +05:30 ]
ஆஸ்திரேலியாவின் வட மேற்குக் கடலில் மூழ்கிய படகில் பயணித்த 12 இலங்கைத் தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். இதில் ஒருவரின் உடல் மட்டும் நேற்று மீட்கப்பட்டது. ஏனையவர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. கடலில் மூழ்கிப் போனவர்களைத் தேடும் பணியில் தொடர்ந்து ஆஸ்திரேலிய விமானப்படையும், மீட்புப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

படகு விபத்திலிருந்து மீட்கப்பட்ட 27 பேர் கிறிஸ்மஸ் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கடலில் மூழ்கிய இலங்கைப் படகு, காக்கஸ் தீவுக்கு அருகே தொடர்ந்து செல்ல முடியாமல் சிக்கித் தவித்தது. இதையடுத்து அவசர கால செய்தியை படகின் ஓட்டுநர் அனுப்பினார்.

இதைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய விமானக் கண்காணிப்புப் பிரிவினர் கடற்படைக்குத் தெரிவித்து மீட்புக் கப்பலை விரைந்து போகச் செய்தனர். மீட்புக் கப்பல் வந்த பின்னரே கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடந்தது.

மீட்கப்பட்டவர்கள் பெரும் குரலில் கதறி அழுததாகவும், அது மனதை இளகச் செய்வதாக இருப்பதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்தாக செய்திகள் கூறுகின்றன.

இந்தப் படகில் 39 பேர் இருந்ததாக தெரிகிறது.

இதுவரை ஒரு தமிழரின் மரணம் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேரைக் காணவில்லை என்று ஆஸ்திரேலிய உளதுறை அமைச்சர் பிரன்டன் ஓ கானர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் கிட்டத்தட்ட 16 மணி நேரம் படகின் உடைந்த பாகங்களைப் பிடித்தபடி கடல் நீரில் தத்தளித்துள்ளனர்.

படகு விபத்தில் சிக்கிய தமிழர்கள் குறித்து அகதிகளுக்கான வழக்கறிஞர் பமீலா கர் கூறுகையில், இவர்கள் அனைவரும் நேரடியாக இலங்கையிலிருந்து வந்ததவர்கள் என்றும், மலேசியா அல்லது இந்தோனேசியாவின் பிடியில் சிக்கி விடாமல் இருப்பதற்காக நேரடியாக வந்ததாகவும் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.

சிலோன் தமிழர்களுக்கான நீதி மற்றும் சுதந்திரம் என்ற அமைப்பின் தலைவர் ராமலிங்கம் விக்கிரமசிங்கம் கூறுகையில், படகு மூழ்கிய தகவல் பரவியதும் கொழும்பில் உள்ள தமிழர்கள் படகில் இருந்தவர்கள் குறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் கேட்டறிந்த வண்ணம் உள்ளனர்.

படகு விபத்தில் சிக்கியவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்பதால் நாங்கள் அச்சத்துடன் உள்ளோம் என்றார்.

பிந்திய செய்தி

அவுஸ்திரேலிய கடற்பரப்பில் நேற்று காலை மூழ்கிய படகில் இருந்த மேலும் இருவரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. நேற்றும் ஒரு சடலம் மீட்கப்பட்டது
 
 இவர்கள், இலங்கையின் கிழக்கு பகுதியில் இருந்து அண்மையில் புறப்பட்டு வந்தவர்களாக இருக்கலாம் என கனேடிய தமிழ் காங்கிரஸின் தலைவர் சாரதா நாதன் தெரிவித்துள்ளார்
 
தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது என பலர் கிழக்கில் இருந்து தொடர்பு கொண்டு கேட்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
படகில் பயணித்தவர்கள் அனைவரும் ஆண்கள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அவர்கள் மூன்று வார காலம் கடலில் பயணித்தே அவுஸ்திரேலிய கடற்பரப்புக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
படகு பயணம் ஆபத்தானது என்ற போதும் இலங்கையில் வசிப்பது அதனை விட ஆபத்தானது என அவர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் சாரதா நாதன் தெரிவித்துள்ளாh


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்