One moment please..
 
செய்தி
யுததததில் பலியான படைவீரர்களை அரசாங்கம் மறந்து விட்டது: ரணில் விக்கிரமசிங்க
[ செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 09:00.50 AM GMT +05:30 ]
இறுதி யுத்தத்தின் குறிப்பிட்ட ஒரு தாக்குதலில் மாத்திரம் கொல்லப்பட்ட 5,000 படை வீரர்களுக்கும், காயமடைந்த 20,000 வீராகளுக்கும் அரசாங்கம் கௌரவம் செலுத்தவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

வெற்றியை கொண்டாடும் அரசாங்கம் வெற்றிக்கு காரணமானவர்களை புறம் ஒதுக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.  இந்த வெற்றியில் பொதுமக்களும் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

எனினும், அரசாங்கம் எந்த திசையில் இருந்தும் அதிகாரத்தையும், செல்வத்தையும் மாத்திரமே எதிர்பார்க்கிறது என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தற்போது ஒரு கட்டுப்பாடற்ற நிலைமையை நோக்கி நகர்கிறது, இது நமது அதிகாரங்களையும் இறைமையையும் இழக்கும் சாத்தியத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கான நீரினையும், உரத்தினையும் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது..

இதேவேளை அரசாங்கம் தற்போது வெளிநாடுகளுடன் வாதங்களை முன்வைத்து வருகிறது. இதன் தலைவிதியை இலங்கை மக்களே அனுபவிக்க நேரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் சர்வதேசத்தின் பல நாடுகளின் பொருளாதாரங்கள் பின்தங்கியிருக்கும் நிலை இருப்பினும், அந்ததந்த நாடுகளின் அரசாங்கங்கள் தமது திரவத்தன்மையை அறிந்து செயற்படுவதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாடே வேலை வாய்ப்பின்றி தடுமாறும் போது, அரசாங்கம் தமது குடும்ப சுற்றுலாவுக்காக, 180 பில்லியன்களை செலவிட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்