Switch to
   
   
   
செய்தி
கே.பி.யின் விசாரணை தொடர்பாக இலங்கை - இந்தியா உறவில் விரிசல்
[ செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 01:33.49 AM GMT +05:30 ]
கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைத்திருக்கும் கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் மீதான விசாரணை தொடர்பாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதென்று கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் லாகூர் நகரில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து புலிகளின் முக்கிய பிரமுகரும் மலேஷிய அரசால் கைது செய்யப்பட்டு தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டவருமான கே.பி யிடம் விசாரணை செய்வதற்காக பாகிஸ்தான் புலனாய்வுக்குழு ஒன்று இலங்கை வந்துள்ளது.

இந்த விசாரணைக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளமை காரணமாக இந்திய அரசுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக கே.பியிடம் விசாரணை நடத்த வேண்டும் என இந்தியா இலங்கையை பலகாலமாக கேட்டு வந்தபோதிலும் அதனை அனுமதிக்காத இலங்கை தற்போது கொழும்பு வந்திருக்கும் பாகிஸ்தான் புலனாய்வுக் குழுவிற்கு அனுமதி வழங்கியிருப்பது இந்தியாவை பார்க்கிலும் பாகிஸ்தானுக்கு இலங்கை முக்கியத்துவம் கொடுக்கின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது எனவும் கூறப்படுகிறது.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
advertisement