|
|
|
| மஹிந்தவின் யுத்த தேனிலவு முடிவுக்கு வருகிறது: ஓர் ஆய்வு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 04:47.52 AM GMT +05:30 ] |
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் “யுத்த தேனிலவு” முடிவுக்கு வந்துள்ளது. அண்மையில், பெற்றோலிய பணியாளர்களும், மாணவர்களும் நடத்திய போராட்டங்கள் இதனை எடுத்துக்காட்டுக்கின்றன. |
அதேநேரம் நீர் மற்றும் தபால் பணியாளர்களும் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்களுக்கு தயாராகி வருகின்றமை அவரின் தேனிலவுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.
மஹிந்த ராஜபக்ச யுத்தத்தின் போது பல திட்டங்களை கொண்டிருந்தார். எனினும், அவர் அவ்வாறான எந்த ஒரு பொருளாதார திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. யுத்தத்தின் பின்னர் அதன் அலையிலேயே பொருளாதாரத்தை அவர் முன்கொண்டு செல்ல முனைகிறார்.
இந்தநிலையில் நாட்டை பாதுகாப்பதற்கு, பொதுமக்களுக்கு எதிர்வரும் தேர்தல் காலத்தில் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் அபிவிருத்தி திட்டங்கள் எவ்வித தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்தவில்லை.
மேம்பாலங்களும்,ஏனைய நாட்டிற்கு தற்போதைக்கு தேவையற்ற அபிவிருத்திகளும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை. இவை நீண்டகால திட்டத்திற்கு ஏற்புடையதாக இருக்கலாம் ஆனால் தற்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பசிக்கு தீனி போடவேண்டிய கடமையில் இருந்து அரசாங்கம் விலகியுள்ளது.
யுத்தத்தின் பின்னர், ஏற்பட்டுள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் திட்டங்கள் எவையும் இல்லை. இதன் காரணமாகவே அரசாங்கம் உரிய ஒதுக்கங்களை செய்யாமல் பணத்தை அச்சிட்டுள்ளது. இது பணவீக்கத்தை மேலும் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் மஹிந்தவின் ஆட்சியை முடிவுறுத்தும் சக்தியை கொண்ட எதிர்க்கட்சி ஒன்று உருவாகுமானால் அது மஹிந்தவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை என ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர் |
|
|
|
|
| காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்! |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ] |
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்] |
| சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல் |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ] |
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்] |
| சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ] |
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர் ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்] |
| பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ] |
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்] |
| தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு |
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] [ ] |
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|