|
|
|
| கணக்கறிக்கை மீதான வாக்கெடுப்பிற்கு எதிராக வாக்களிக்கப்படும் என ஐ.தே.க, ஜே.வி.பி. தெரிவிப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 08:28.54 AM GMT +05:30 ] |
எதிர்வரும் 5ம் திகதி அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள கணக்கறிக்கை மீதான வாக்கெடுப்பிற்கு எதிராக வாக்களிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.
|
2010ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்காக வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான கணக்கறிக்கை மீதான பிரேரணை இன்றைய தினம் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களை கருத்திற் கொண்டு வரவு செலவுத் திட்ட பிரேரணை முன்வைக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டதன் பின்னர் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 2010ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் மொத்த செலவுகளுக்காக 36,060 கோடி ரூபா தேவைப்படுவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ள கணக்கறிக்கை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 5ம் திகதி வரையில் விவாதிக்கப்பட உள்ளது. நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் இரண்டும் இந்த யோசனைத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
|
|
|
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்! |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ] |
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்] |
| யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ] |
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்] |
| இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ] |
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] [ ] |
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] [ ] |
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| advertisement |
|
|