செய்தி
ரயில்வே காணியில் கட்டிடம் அமைக்க மாநகர சபை அனுமதி: யாழ்.மேயரின் மேலும் ஒரு முறைகேடு
[ வியாழக்கிழமை, 10 மே 2012, 05:21.38 PM GMT ]
யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் கட்டிடங்களை அமைப்பதற்கு மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா அனுமதிகளை வழங்கிவருவதாக தெரியவருகின்றது.

குறிப்பாக மாநகர சபைக்குட்பட்ட பகுதியில், யாழ்.நகரில் ரயிவே திணைக்களத்திற்கு சொந்தமான காணி ஒன்றில் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியை மாநகர சபை வழங்கியுள்ளது.

இதற்கான அனுமதியை மாநகர முதல்வர் எவ்வாறு வழங்கினார் என்பது குறித்து சில அரச அதிகாரிகள் விசனமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை, ஏற்கனவே யாழ்.கஸ்தூரியார் வீதியில் மாடி கட்டிடம் ஒன்றை முறைகேடான முறையில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா துணைபோயுள்ளதாக முறைப்பாடுகள் வெளிவந்துள்ள நிலையிலேயே இச்சம்பவமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 22-05-2013, 02:41.35 PM ]

அரசாங்கத்தைக கவிழ்ப்பதற்கு சூழ்ச்சித் திட்டங்களை தீட்ட வேண்டிய அவசியமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

[ Wednesday, 22-05-2013, 02:09.02 PM ]

முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் பாடசாலை சென்ற சிறுமியை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கோடு பற்றைக்குள் இழுத்துச் சென்ற படைச் சிப்பாய் மீது எங்கும் முறைப்பாடு செய்யக்கூடாதென புலனாய்வுப் பிரிவினர் என்று அடையாளப்படுத்திய நபர்கள் அச்சுறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

[ Wednesday, 22-05-2013, 01:53.02 PM ]

மட்டக்களப்பு- செங்கலடி நகரில் நள்ளிரவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 29ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

[ Wednesday, 22-05-2013, 12:42.54 PM ]
இரவு ரயில் பிரயாணம் செய்து கொண்டிருந்த இ.போ.ச. உத்தியோகத்தருக்கு குளிர்பானத்துடன் மயக்க மருந்தினைக் கலந்து அருந்தக் கொடுத்து பணம, நகை மற்றும் கைத் தொலைபேசி ஆகியனவற்றை திருடிச் சென்ற சம்பவமொன்று கொழும்பு-பதுளை இரவு தபால் ரயிலில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
[ Wednesday, 22-05-2013, 12:35.09 PM ]

கொழும்பு, கொம்பனி வீதி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் நான்கு பொலிஸாரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

[ Wednesday, 22-05-2013 07:15:23 GMT ]
எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் கடந்த 16-ம் தேதி 6 காவல் துறையினரும், ஒரு எல்லைக்காவல் படை வீரரும், பேருந்துகளில்  பயணம் செய்துகொண்டிருந்தபோது கடத்தப்பட்டனர்.
[ Wednesday, 22-05-2013 11:38:24 GMT ]
சினிமா, கிரிக்கெட்டிற்கு அடுத்தபடியாக அரசியல்வாதியாகவும் வலம் வரவிருக்கிறார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.
[ Wednesday, 22-05-2013 14:42:16 GMT ]
ராஜஸ்தான் றொயல்ஸ் அணிக்கெதிரான ஆறாவது ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
[ Wednesday, 22-05-2013 07:38:03 GMT ]
கடல் நீரில் இருந்து யுரேனியம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
[ Wednesday, 22-05-2013 11:53:12 GMT ]
கமல்ஹசான் தயாரித்து இயக்கி நாயகனாக நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.