புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையில் பொன்சேகாவிற்கு பாதுகாப்பு வழங்கப்படும்: தினேஷ் குணவர்தன
பாதுகாப்பு வழங்குமாறு சரத் பொன்சேகா இதுவரையில் கோரிக்கை எதனையும் முன்வைக்கவில்லை. சரத் பொன்சேகாவிற்கு நிலவி வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் மதிப்பீடு செய்து புலனாய்வு பிரிவினர் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
அதன் அடிப்படையிலேயே பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவிற்கு பாதுகாப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.