செய்தி
செய்தி
முல்லைத்தீவை நோக்கி வெலிஓயா இராணுவத்தினர் நள்ளிரவில் நடத்திய கடும் எறிகணைத் தாக்குதல்: குழந்தை பலி; முல்லைத்தீவு அரச அதிபர் உட்பட 16 பேர் காயம்.
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2008, 04:48.37 AM GMT +05:30 ]
முல்லைத்தீவு நகரப்பகுதியை நோக்கி நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் இராணுவத்தினர் நடத்திய கடுமையான எறிகணைத் தாக்குதலில் ஒரு வயதுக் குழந்தையொன்று உடல் சிதறி மரணமாகியுள்ளது. முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலைப் பணிப்பாளரின்  மனைவி  உட்பட  16 பேர் காயமடைந்துள்ளனர்

முல்லைத்தீவு மருத்துவமனை, அரச அதிபர் இல்லம், மருத்துவர்கள் குடியிருப்பு ஆகியவற்றை நோக்கியே   இலங்கைப் படையினர் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலில் ஒன்றரை வயதுக் குழந்தையான முள்ளியவளை நீராவிப்பிட்டியைச் சேர்ந்த ஐயன் சங்கீர்த்தன் உடல் சிதறிப் பலியாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைப்  பணிப்பாளர் சண்முகராஜாவின் மனைவி திருமதி ரேணுகா உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையை அண்டிய நீராவிப்பிட்டி, உடுப்புக்குளம், குமரபுரம் மற்றும் தண்ணீரூற்று ஆகிய பிரதேசங்களிலும் நேற்றிரவிலிருந்து தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

முல்லைத்தீவு வைத்தியசாலை  கட்டிடங்கள் , வைத்தியசாலைப் பணிப்பாளரின் விடுதி, வேறு பொதுமக்களின்   வீடுகள், பொதுக் கட்டிடங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளன. சில வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளன.

காயமடைந்தோர் விவரம்:

முல்லைத்தீவு அரச அதிபர் இமெல்டா சுகுமார்

சண்முகராசா ரேணுகா (வயது 36)

முல்லைத்தீவைச் சேர்ந்த சந்தியா (வயது 40)

நீராவிப்பிட்டியைச் சேர்ந்த தே.சந்தனவதி (வயது 50)

தண்ணீரூற்றைச் சேர்ந்த பிறேமலா (வயது 33)

நீராவிப்பிட்டியைச் சேர்ந்த த.அன்னலட்சுமி (வயது 57)

நீராவிப்பிட்டியைச் சேர்ந்த கண்மணி (வயது 50)

உடுப்புக்குளத்தைச் சேர்ந்த சு.சுவேந்திரலதா (வயது 23)

முள்ளியவளையைச்சேர்ந்த வி.ஆரெழினி (வயது 05)

தண்ணீரூற்றைச் சேர்ந்த இ.தேகன் (வயது 21/2)

குமாரபுரத்தைச் சேர்ந்தவர்களான

த.வீரம்மா (வயது 57)

இ.ருக்குமணி (வயது 72)

வே.நடராசா (வயது 56)

ஐ.இராசகுமாரி (வயது 36)

ஐ.சங்கீதா (வயது 10)

ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை காயமடைந்தவர்கள்  முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வேளை, நடத்தப்பட்ட இந்த எறிகணைத் தாக்குதல்களினால் நிலைகுலைந்து போன பொதுமக்கள் அல்லோல கல்லோலப்பட்டுப் போக்கிடமின்றிச் சிதறியோடி அவலப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Copyright (c) 2008-09 TamilWin.com, All rights reserved.