| வடக்கு கல்வி அபிவிருத்திக்காக 600 மில்லியன் ஒதுக்கீடு: கல்வி அமைச்சர் |
| [ சனிக்கிழமை, 07 நவம்பர் 2009, 04:01.41 AM GMT +05:30 ] |
வடக்கில் கல்வி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக சுமார் 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
எதிர்வரும் வருடத்திற்கு பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்ட போது கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த கொழும்பில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்து பத்தாயிரம் பாடசாலை மாணவ மாணவியருக்கு சீருடைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கின் கல்வி அபிவிருத்திக்காக சுமார் 600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 355 மில்லியன் ரூபா செலவில் 9 பாடசாலைகள் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். |
| முன்செல்ல |
|
|