செய்திகள் 2009-10-30
தயா மற்றும் ஜோர்ஜ் ஆகியோர் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
[வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009, 03:43 PM]
படையினரிடம் சரணடைந்த, தமிழீழ விடுதலைப்புலிகளின், முன்னாள்  ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும், மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் இன்று கொழும்:பு, மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். [மேலும்]
(3ம் இணைப்பு)
பம்பலப்பிட்டி கடலில் மூழ்கி மரணமான இளைஞர் தமிழர் என அடையாளம்: பொலிஸ் உத்தியோகத்தர் கைது (வீடியோ இணைப்பு)
[வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009, 12:22 PM]
நேற்று பம்பலப்பிட்டி கடலுக்குள் குதித்தபோது தாக்கப்பட்டு உயிரிழந்த தமிழ் இளைஞரின் சடலம் சற்று நேரத்திற்கு முன்னர் கரை ஒதுங்கியது. இத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமல் மெதிவக்க தெரிவித்தார். சற்று முன்கிடைத்த செய்தியின்படி இந்த இளைஞரைத் தாக்கியதாகக் கருதப்படும் பொலிஸ் உத்தியோகத்தரை விசேட பொலிஸ் குழு கைது செய்துள்ளது. [மேலும்]
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் : இல. கடற்படைப் பேச்சாளர் மறுப்பு
[வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009, 12:15 PM]
இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும், இந்திய ஊடகங்களில் வெளியானது போன்று இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை எனவும் இலங்கை  கடற்படைப் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க தெரிவித்துள்ளார். [மேலும்]
ஓசியானிக் கப்பலில் உள்ள தமிழ் அகதிகளை இந்தோனேசியாவில் தரையிறக்கவே அவுஸ்திரேலியா எதிர்பார்க்கிறது: ஆஸி். பிரதமர்
[வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009, 06:51 AM]
ஓசியானிக் விக்கிங் கப்பல் மூலமாக அவுஸ்திரேலியா வந்து, அங்கிருந்து வெளியேறியுள்ள இலங்கை அகதிகளை இந்தோனேசியாவில் தரையிறக்க அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாக அவுஸ்திரேலியா பிரதமர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார். [மேலும்]
ராஜரட்னத்தின் தண்டனையை குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது
[வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009, 06:45 AM]
பங்கு உட்சந்தை வியாபாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்னத்தின், பிணை அபராதத் தொகையை, 100 மில்லியன் டொலர்களில் இருந்த 25 மில்லியன் டொலர்களாக குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது. [மேலும்]
இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ நாளை திருப்பதி செல்கிறார்: வரலாறு காணாத பாதுகாப்பு
[வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009, 06:28 AM]
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்துக்கும் கடந்த சில மாதங்களாக கடும் போர் நடந்தது. இதில் விடுதலைப்புலிகளை அழித்து விட்டதாக சிங்கள இராணுவம் கூறி வருகிறது. [மேலும்]
இலங்கையின் மீள்குடியேற்றம் தொடர்பாக கருணாநிதிக்கு இலங்கை அரசின் சார்பில் ஆறுமுகம் தொண்டமான் விளக்கம்
[வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009, 04:51 AM]
இலங்கையில், இடம்பெயர்ந்தோரை, மீள்குடியமர்த்தும் பணிகள் குறித்து, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதிக்கு விளக்கமளித்துள்ளார். இது தொடர்பான சந்திப்பு நேற்று கருணாநிதியின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
[மேலும்]
சர்வதேச ரீதியில் செயற்பட்டு வரும் 57 புலி தலைவர்கள் பற்றிய தகவல்களை கே.பி வெளியிட்டுள்ளார்: திவயின தகவல்
[வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009, 04:39 AM]
சர்வதேச ரீதியில் செயற்பட்டு வரும் 57 தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்கள் பற்றிய தகவல்களை குமரன் பத்மநாதன் வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
பொலிஸ் மா அதிபராக மஹிந்த பாலசூரிய நியமிக்கப்படவுள்ளார்
[வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009, 04:33 AM]

இலங்கையின் பொலிஸ் மா அதிபராக மஹிந்த பாலசூரிய நியமிக்கப்படலாம் என நம்பகத் தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ன எதிர்வரும் 3 ம் திகதியுடன் ஓய்வுபெற உள்ளதாகவும், குறித்த வெற்றிடத்திற்காக மஹிந்த பாலசூரிய நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

[மேலும்]

ஜீ.எஸ்.பி வரிச் சலுகைகயை பெற்றுக்கொள்ளாது ஏனைய தரப்பினர் மீது அரசாங்கம் குற்றம் சுமத்துகிறது: ஜே.வி.பி.
[வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009, 04:30 AM]
ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை பெற்றுக்கொள்ளாது அரசாங்கம் ஏனைய தரப்பினர் மீது குற்றம் சுமத்தி வருவதாக ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது. [மேலும்]
ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இழக்கப்பட்டால் அதனை எதிர்நோக்கத் தயார்: மத்திய வங்கி ஆளுனர்
[வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009, 04:25 AM]
ஜீ.எஸ்.பி வரிச் சலுகைத் திட்டம் இலங்கைக்கு கிடைக்கப் பெறாவிட்டால் அவ்வாறான ஓர் சூழ்நிலையை எதிர்நோக்க அரசாங்கம் தயார் நிலையில் இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
[மேலும்]
எந்தவொரு இராணுவ உத்தியோகத்தரும் அரசியலில் ஈடுபட முடியாது: இராணுவத் தளபதி
[வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009, 04:19 AM]
எந்தவொரு இராணுவ உத்தியோகத்தரும் அரசியலில் ஈடுபட முடியாது எனவும், அவ்வாறு ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
[மேலும்]
ஜனாதிபதியை கொலை செய்ய எத்தனித்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது
[வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009, 03:21 AM]
 ஜனாதிபதியை கொலை செய்ய எத்தனித்த மற்றும் ஒருவரை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்துள்ளதாக குற்றப்புலனாய்வு துறையினர், கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில், தெரிவித்துள்ளனர். [மேலும்]
கடன் வட்டிவீதக்குறைப்பால் அரசாங்கத்தின் வருமானத்தில் பாரிய நட்டம்: தேர்தல் விளையாட்டே இது என்கிறது ஐ.தே.க.
[வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009, 03:16 AM]
இலங்கையின் அரச வங்கிகள், தமது கடன்களுக்கான வட்டிவீதத்தை குறைக்கவேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் வரிவருமானத்தில் 70 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், கடன் வட்டிவீதத்தை குறைத்தமைக்கான காரணம் தேர்தலை மையமாக வைத்த செயற்பாடே என்றும் ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. [மேலும்]
வெள்ளைத்தோல் அல்லாத யாரை நியமித்தாலும் பிலிப் அல்ஸ்டன் நம்பகத்தன்மை குறித்து சந்தேகிப்பார்: அவரின் மத்தியஸ்தம் பக்கச்சார்பானது என்கிறது அரசாங்கம்
[வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009, 02:40 AM]
யுத்தக் குற்றம் தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை தொடர்பில் உள்நாட்டில் ஆராய்ந்து விசாரிக்க வெள்ளைத்தோல் அல்லாதவர்களை இலங்கை அரசாங்கம் நியமித்தமையினாலேயே ஐ.நா.சபையின் பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளார் என்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
[மேலும்]
அகதிகளை நாடுகடத்தப் போவதாக இந்தோனேசியா எச்சரிக்கை
[வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009, 02:27 AM]

இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுக்கப்பால் படகில் பயணித்த வேளை பிடிபட்ட 78 இலங்கை அகதிகளும் தம்மை அடையாளப்படுத்த அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறும் பட்சத்தில் நாடு கடத்தப்படுவார்கள் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சத்துள்ளனர். [மேலும்]

வவுனியாவில் கப்பம் வசூலிப்பு,கொலைகளில் ஈடுபட்ட 6 பேர் கைது
[வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009, 01:53 AM]
வவுனியாவைச் சூழவுள்ள பகுதிகளில் வர்த்தகர்களிடமும், ஏனையோரிடமும் கப்பம் பெற்றனர் எனக் கூறப்படும் 6 சந்தேக நபர்களை வவுனியா மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
வன்னி அகதிகளுக்கான நிதியுதவியை இந்த வருடத்துடன் நிறுத்தப் போவதாக பிரிட்டன் தெரிவிப்பு
[வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009, 01:45 AM]
வவுனியா அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் நடமாட்ட சுதந்திரத்தை வலியுறுத்தி, இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, இந்த வருடத்துடன் பருவமழை முடிந்த கையோடு அகதிகளுக்காக இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்தப் போவதாக பிரிட்டன் மீண்டும் உறுதியாகத் தெரிவித்திருக்கிறது. [மேலும்]
தமிழினத்தை அழிக்கும் இந்திய அரசுக்குக் கைகொடுத்துக் கொண்டு ஒப்பாரி வைப்பது வேடிக்கையாக இல்லையா?: தொல்.திருமாவளவனிடம் கேள்வி
[வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009, 01:33 AM]
இலங்கையில் தமிழினத்தை அழிக்கும் இந்திய அழிப்பாற்றலுக்குக் கைகொடுத்துக் கொண்டு ஒப்பாரி வைப்பது வேடிக்கையாக இல்லையா? இவ்வாறு விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தமிழ்த்திரு தொல். திருமாவளவன் அவர்களுக்கு மலேசியாவிலிருந்து இரா. திருமாவளவன் கேள்விக்கணை தொடுத்துள்ளார். [மேலும்]
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்