செய்திகள் 2009-10-31
(2ம் இணைப்பு)
இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுக்கு திருப்பதியில் பூரண கும்ப மரியாதை: வைகோ கண்டனம்
[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 04:41 PM] []
இலங்கை  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு  திருப்பதி கோயிலில் பூரண கும்ப மரியாதை அளிப்பது தமிழர்களை வேதனைப்படுத்துவதாக உள்ளது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார். [மேலும்]
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரான முதலாவது இனப் படுகொலை!: பாரிஸ் ஈழநாடு
[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 03:24 PM]
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரான முதலாவது இனப் படுகொலை கொழும்பில் அரங்கேற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை பம்பலப்பிட்டி கடலில் வைத்து நடாத்தப்பட்ட இந்தப் படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர் இரத்மலானையில் வசித்த 26 வயதுடைய பாலகிருஷ்ணன் சிவகுமார் என அடையாளம் காணப்பட்டது. [மேலும்]
பம்பலப்பிட்டிக் கடலில் கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞரின் இறுதிக் கிரியை நாளை
[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 03:06 PM]
பம்பலப்பிட்டிக் கடலில் மூழ்க வைத்துக் கொலை செய்யப்பட்ட இளைஞர் பாலவர்ணன் சிவகுமாரனின் சடலம் நேற்றுக் கரை ஒதுங்கியதையடுத்து அவரது சகோதரர் அவரை அடையாளம் காட்டினார். [மேலும்]
ரஷ்ய வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயம் குறித்து, அந்த நாடு பெருமிதம்
[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 03:01 PM]
இலங்கைக்கு அண்மையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர், சேஜே லவ்ரவ் விஜயம் மேற்கொண்டமையானது இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவின் ஒரு மைல் கல் என ரஷ்யா தெரிவித்துள்ளது. [மேலும்]
மீள்குடியமர்த்தல் நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை: ஜனாதிபதி
[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 02:44 PM]
இலங்கை அரசாங்கம் தற்போது இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை வழங்கி வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். [மேலும்]
மட்டக்களப்பில் வெடிவிபத்து: இரண்டு சிறுவர்கள் காயம்
[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 02:39 PM]
மட்டக்களப்பு மாவட்டம், ஊறுகாமம் பகுதியில்  நேற்று வெள்ளிக்கிழமை கைக்குண்டு ஒன்று வெடித்ததில் சிறுவர்கள் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
[மேலும்]
தேவர் உயிருடன் இருந்திருந்தால் ஈழத்திற்குப் படை ஒன்றை அனுப்பியிருப்பார்: அஞ்சலிக் கூட்டத்தில் வைகோ
[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 09:36 AM]
முத்துராமலிங்கத் தேவர் உயிருடன் இருந்திருந்தால் இலங்கைத் தமிழர்களைக் காக்க படை ஒன்றை அனுப்பியிருந்திருப்பார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். [மேலும்]
மஹிந்த ராஜபக்ச வருகையை எதிர்த்து, சென்னை திருப்பதி தேவஸ்தான அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம்
[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 09:25 AM]
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று திருப்பதி கோவிலுக்கு வருகை தரவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் ஆர்வலர்கள் இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். [மேலும்]
கைகூப்பி உயிர் பிச்சை கேட்டவரை அடித்து கொலை செய்த அராஜகத்திற்கு எதிராக 4ம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம்: மனோகணேசன் எம்பி அழைப்பு (வீடியோ இணைப்பு)
[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 08:55 AM]
கொழும்பு பம்பலப்பிட்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் சிவகுமாரனை பல நூறு பேர் பார்த்திருக்க, பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 4ம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது. [மேலும்]
யுத்தம் தொடர்பாக தகவல்கள் திரட்டிய அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்
[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 07:07 AM]
வன்னியில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பான தகவல்களை திரட்டி உளவுப் பணியில் ஈடுபட்ட சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியக் கொடுப்பனவில் சிக்கல்
[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 06:19 AM]
வெளிநாடுகளில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளில் சிக்கல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
பொது வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை: எஸ்.பி. திஸாநாயக்க
[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 05:53 AM]
எதிர்க்கட்சிகளின் பொதுவான ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை இதுவரையில் தீர்மானிக்கவில்லை என மத்திய மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். [மேலும்]
இலங்கைச் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களினால் கிறிஸ்மஸ் தீவில் பதற்ற நிலை
[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 05:46 AM]
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்களினால் கிறிஸ்மஸ் தீவில் பதற்ற நிலை உருவாகியுள்ளதென அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்
[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 05:38 AM]
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கொழும்பில் பாரிய வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
பம்பலப்பிட்டி கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும்: ஆயர் சிக்கேரா
[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 04:20 AM]
கொழும்பு பம்பலப்பிட்டியில் கடலில் மூழ்கடித்து தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு கொழும்பு மாவட்ட அங்கிலிக்கன் ஆயர் வணக்கத்துக்குரிய டுலிப் சிக்கேரா கோரிக்கை விடுத்துள்ளார். [மேலும்]
தமக்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி பிள்ளையானிடம் கோரிக்கை
[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 03:55 AM]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவளிக்குமாறு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் கோரியுள்ளார். [மேலும்]
பிரித்தானியாவில் 9 ஆவது கிழமையாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம்
[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 03:05 AM] []
இலங்கை அர‌சாங்க‌த்தினால் வ‌ன்னியில் இருந்து சிறைபிடிக்க‌ப்ப‌ட்டு வ‌வுனியா வ‌தைமுகாம்க‌ளில் அடைக்க‌ப்ப‌ட்டிருக்கும் அப்பாவி த‌மிழ் ம‌க்க‌ளை விடுவிக்க‌ கோரி இன்று 9 ஆவ‌து வெள்ளிக்கிழ‌மையாக‌ பிரித்தானிய‌ பிர‌த‌ம‌ர் காரியால‌ய‌த்தின் முன்ற‌லில் பிரித்தானியா த‌மிழ் ம‌க்க‌ளால் தொட‌ர் க‌வ‌ன‌யீர்ப்பு போராட்ட‌ம் முன்னெடுக்க‌ப்ப‌ட்ட‌து. [மேலும்]
7 கோடி ரூபா செலவில் வடபகுதியில் இரண்டு புதிய இளைஞர் படையணி
[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 02:38 AM]

இளைஞர் விவகார அமைச்சினால் வட மாகாணத்தில் 7 கோடி ரூபா செலவில் இரண்டு புதிய இளைஞர் படையணியை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. [மேலும்]

கப்பலில் இருக்கும் 78 இலங்கையர்களையும் இந்தோனேசியா பலவந்தமாக இறக்காது: அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு
[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 02:15 AM]
ஆஸ்திரேலியக் கப்பலில், இந்தோனேஷியத் துறைமுகத்தில் உள்ள 78 இலங்கையர்களையும் இறக்குவதற்குப் பலத்தைப் பயன்படுத்தப் போவதில்லையென இந்தோனேஷியா தெரிவித்துள்ளது. அவர்கள் கப்பலிலிருந்து இறங்க மறுத்து வருகின்ற நிலையில் இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் மார்ட்டி நட்டலேகவா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
[மேலும்]
ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை வழங்குதல்; இலங்கையுடனான பேச்சுகள் முடிவு: ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு
[சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 02:03 AM]
"ஜி.எஸ்.பி." வரிச்சலுகையை வழங்குவது தொடர்பாக இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த பேச்சுகள் முடிவடைந்துவிட்டன என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேர்னாட் சவேஜ் பிரிட்டனின் "பினான்சியல் டைம்ஸ்" செய்தித்தாளுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். [மேலும்]
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்