செய்திகள் 2009-10-29
சீனா சிறீலங்காவுக்கு நீண்டகால கடன் அடிப்படையில் இயந்திரங்களை வழங்கியுள்ளது
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 08:33 PM] []
சீனா அரசாங்கத்தின் இரண்டாயிரத்தி நாற்பத்தி ஒன்பது மில்லியன் ரூபா பெறுமதியான இயந்திரங்கள் சிறீலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டள்ளன. [மேலும்]
பொதுமக்களால் தண்டிக்கப்பட்ட இளைஞர் பரிதாப மரணம். கொழும்பில் சம்பவம்
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 07:27 PM]
பொதுமக்களால் தண்டிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணமான சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
சண்டேலீடர் ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விசாரணைகளுக்கு ஜனாதிபதி உத்தரவு
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 07:23 PM]
சண்டேலீடர் செய்திதாளின் இரண்டு ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச. உத்தரவிட்டுள்ளார். [மேலும்]
“ஐக்கிய தேசிய முன்னணி” எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று ஆரம்பிக்கப்படவுள்ளது
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 07:11 PM]
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணி எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது [மேலும்]
சரத் பொன்சேகா அமெரிக்காவில் தெரிவித்த கூற்றுக்கு கருத்து கூற விரும்பாத ஊடக அமைச்சர்
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 03:48 PM]
 பாதுகாப்பு படைகளின் தலைமையதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவில் வைத்து தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் கருத்துக் கூறுவதற்கு விரும்பவில்லை என ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.
[மேலும்]
ஜே.ஆரின் நிறைவேற்று அதிகார முறைமையினால் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டது: அரசாங்கம்
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 03:22 PM]
முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜே.ஆர். ஜயவர்த்தனவின் நிறைவேற்று அதிகார முறைமையின் காரணமாகவே பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடிந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. [மேலும்]
ஜனாதிபதியின் ஆலோசகராக கடமையாற்ற விருப்பமில்லை: தயான் ஜயதிலக்க
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 03:17 PM]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு ஆலோசகராக கடமையாற்றும் விருப்பம் தமக்கில்லை என முன்னாள் ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். [மேலும்]
நெதர்லாந்தில் அரசியல் புகலிடம் மறுக்கப்பட்டுள்ள தமிழர்கள் தொடர்பாக அவசர ஒன்றுகூடல்
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 02:13 PM]

நெதர்லாந்தில் அரசியல் புகலிடம் மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படவிருக்கும் தமிழர்களை காப்பாற்றுவது குறித்து ஆராய நெதர்லாந்துத் தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பினரின் அவசர‌ ஒன்றுகூடல் நாளை மறுதினம் சனிக்கிழமை இரவு 7.00 மணியளவில் நடைபெறவுள்ளது. [மேலும்]

கிழக்கு மாகாண தமிழர்களின் காணிகள் சிங்களவர்களால் அபகரிக்கப்படுவது குறித்து அரியநேத்திரன் ஜனாதிபதியிடம் முறைப்பாடு
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 11:57 AM]
கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் காணிகளை சிங்களவர்கள் அபகரிக்க முற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார். [மேலும்]
உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வரங்கக் குழுத் தலைவராக சிவத்தம்பி நியமனம்
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 11:51 AM]
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி ஆய்வரங்கப் பணிகளை மேற்கொள்ளும் ஆய்வரங்கக் குழுவுக்குத் தலைவராக பேராசிரியர் கா.சிவத்தம்பி நியமிக்கப்பட்டிருக்கிறார். [மேலும்]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேபாளம் விஜயம்
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 08:59 AM]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம உள்ளிட்ட குழுவினர் நேபாளத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை வெறி தாக்குதல்: படகு சேதம்; மீன்கள் கொள்ளை
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 08:48 AM]

இராமேசுவரத்தில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற மீனவர்களை சிங்கள கடற்படையினர் சுற்றி வளைத்து உருட்டுக்கட்டையாலும், கம்பிகளாலும் தாக்கியுள்ளனர். மேலும் அவர்களின் படகையும் சேதப்படுத்தியதுடன், பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இரால் மீன்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். [மேலும்]

வீண் வார்த்தைகளை விடுத்து செயலில் இறங்கவேண்டும்: இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தல்
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 08:15 AM]
இலங்கை அரசாங்கம் வீண் வார்த்தைகளை விடுத்து, செயல்களில் இறங்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின், தெற்காசிய உறவுகள் பிரதிநிதிகளின் தலைவர் ஜீன் லம்பெர்ட் இதனை தெரிவித்துள்ளார். [மேலும்]
இலங்கை தொடர்பில் செயற்படவுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளின் பேரவை தெரிவித்துள்ளது
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 08:11 AM]
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உரிமைகள் பேரவையின் இலங்கைக்கான புதிய பிரதிநிதி,  மைக்கல் ஜேம்ஸ் ஸ்வோக், இலங்கை சிறுவர்கள் தொடர்பில் செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளார். [மேலும்]
ஆறு தமிழ் பேசும் கட்சிகள் பொதுவான கூட்டணி ஒன்றை அமைக்கத் திட்டம்
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 06:55 AM]
ஆறு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவான ஓர் கூட்டணி ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு  தமிழ் பேசும் அரசியல் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டியது அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

[மேலும்]
இலங்கையில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 272 வெளிநாட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 05:21 AM]
சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த 272 வெளிநாட்டவர்களுக்கு எதிராக குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
ஜனாதிபதியை அரியாசனத்தில் ஏற்றவும், அதிலிருந்து விலக்கவும் எம்மால் முடியும்: சோமவன்ச அமரசிங்க
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 05:16 AM]
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தாமே ஜனாதிபதியாக அரியாசனம் ஏற்றியதாகவும், அவரை அதிலிருந்து விரட்டியடிக்கக் கூடிய சக்தியும் தம்மிடமே இருப்பதாகவும் ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
தென் மாகாணசபை உறுப்பினர்களுக்கு இன்று பதவிப் பிரமாணம் வழங்கப்படவுள்ளது
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 05:12 AM]
அண்மையில் நடைபெற்று முடிந்த தென் மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
[மேலும்]
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாதொழிக்க எதிர்க்கட்சி கூட்டணி திட்டம்: திஸ்ஸ அத்தநாயக்க
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 05:07 AM]
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது ஒழிப்பதே எதிர்க்கட்சி கூட்டமைப்பின் பிரதான இலக்கு என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். [மேலும்]
பயங்கரவாத, அவசரகாலச் சட்டங்களை நீக்க முடியாது: அரசாங்கம்
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 05:04 AM]
பங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஆகியவற்றை நீக்க முடியாதென இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.  [மேலும்]
இலங்கையிலிருந்து தங்கம் கடத்திச் சென்ற இருவர் சென்னை விமான நிலையத்தில் கைது
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 02:44 AM]
கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 67 பவுண் தங்க நகைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இலங்கை பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். [மேலும்]
கடந்த ஜனாதிபதி தேர்தலில், வெற்றியை பெற்றுக்கொடுத்ததை மறக்கமுடியாது: ஜனாதிபதி
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 02:29 AM]
ஜனாதிபதி தேர்தலின் போது எனது வெற்றியின் பக்கத்திற்காக நீங்கள் வேலைசெய்ததை எம்மால் மறக்கமுடியாது. எங்கள் கால்களை பிடித்து இழுத்த போதும், சிலர் ஒளிந்துகொண்ட போதிலும்,சிலர் வெளிநாடுகளுக்கு சென்றபோதிலும் நீங்கள் வெற்றியை பெற்றுக்கொடுத்தீர்கள்.  என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.


[மேலும்]
யாழ். மாநகரசபையின் ஆரம்ப வரவேற்பு நிகழ்வைப் புறக்கணித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள்
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 02:00 AM] []
யாழ்ப்பாணம் மாநகரசபையின் முதலாவது கூட்டமும், அதற்கான ஆரம்ப வரவேற்பு நிகழ்வும் நேற்று சிறப்பாக நடைபெற்றன. எனினும் முதலாவது அமர்வுக்கு முன்னதாக நடைபெற்ற ஆரம்ப வரவேற்பு வைபவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பான உறுப்பினர்கள் 9 பேரும் புறக்கணித்தனர். நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. [மேலும்]
இலங்கை படகு அகதிகளை ஏற்க அவுஸ்திரேலியா மறுப்பு: இந்தோனேஷிய முகாமில் தடுத்துவைக்க முயற்சி
[வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2009, 01:49 AM]
அவுஸ்திரேலிய சுங்கப் பிரிவினரால் காப்பாற்றப்பட்ட 78 அரசியல் புகலிடம் கோருவோரும் எக்காரணம் கொண்டும் அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்துவரப்பட மாட்டார்கள் என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்துள்ளார். [மேலும்]
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்