Switch to
செய்திகள் 2010-07-30
யாழ். வலிகாமத்தில் ஐந்து இளைஞர்கள் யுவதி ஒருவர் மீது பாலியல் பலாத்காரம்
[வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 07:25 PM]
யாழ்ப்பாண வலிகாமம் அளவெட்டி பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை ஐந்து இளைஞர்கள் யுவதி ஒருவரை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்கள். [மேலும்]
யுத்தம் முடிவடைந்தும் ஊடகங்களுக்கெதிரான அராஜகங்கள் கண்டிக்கத்தக்கது: பா.அரியநேத்திரன்
[வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 02:58 PM]
யுத்தம் நிலவிய காலத்தில் ஊடகவியலாளர்களும், ஊடக நிறுவனங்களும் தாக்கப்பட்டனர். அதேபோல் கொல்லப்பட்டனர். ஆனால் யுத்தம் முடிவடைந்து சமாதான சூழல் ஏற்பட்ட பின்னரும் இவ்வாறு ஊடகங்களுக்கெதிராக அராஜகங்கள் கட்டவிழ்த்து விடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். [மேலும்]
தர்ஷிகாவின் உடல் உள்ளுறுப்புகள் இன்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டன
[வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 02:26 PM] []
கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தலுக்கமைய வேலணை மருத்துவ மாதுவின் உடல் உள்ளுறுப்புக்கள் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. [மேலும்]
அமெரிக்காவின் எப்.பி.ஐ. காட்டும் ஈழத்தழிழர் எதிர்ப்பு: செண்பகத்தாரின் திறனாய்வு பார்வை
[வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 01:50 PM]
குற்றத் தடுப்பு, நீதி பரிபாலனம், சட்டம் ஒழுங்கு ஆகிய துறைசார்ந்த அமுலாக்கத்தில் ஈடுபடும் அமெரிக்காவின் முக்கிய உள்நாட்டு உளவமைப்புக்களில் ஒன்றான எப்.பி.ஐ அண்மைக் காலமாக சர்வதேச அரசியல் விவகாரங்களிலும் தலையிடத் தொடங்கியுள்ளது. [மேலும்]
எங்களை சொந்த இடங்களில் மீள் குடியேற்றுங்கள்! அல்லது கொன்றுவிடுமாறு அரசிடம் கூறுங்கள்!: சாந்தபுரம் மக்கள் கூட்டமைப்பினரிடம் கோரிக்கை
[வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 11:56 AM] []
"எங்களை எங்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்யுங்கள் அல்லது எங்களைக் கொன்றுவிடுமாறு அரசாங்கத்திடம் கூறுங்கள்' இவ்வாறு சாந்தபுரம் மக்கள் கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். [மேலும்]
களைத்த நிலையில், 7வது நாளாக தொடரும் சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடைப்பயணம்
[வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 10:34 AM] []
தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 7வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். [மேலும்]
முல்லை., கிளிநொச்சி பிரதேசங்களுக்கான பயண எச்சரிக்கையை பிரித்தானியா நீக்கியுள்ளது
[வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 09:50 AM]
இலங்கையின் வடக்கு பிரதேசங்களான முல்லைத்தீவு, கிளிநொச்சி ,வவுனியா மற்றும் மன்னார் ஆகிய இடங்களுக்கான பயண எச்சரிக்கை அறிவுறுத்தலை பிரித்தானியா விலக்கிக்கொண்டுள்ளது. [மேலும்]
அரசியலாகும் அகதிகள் கப்பல்: நாங்கள் இன்னமும் அறியாத உண்மைகள்
[வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 08:50 AM]
கனடாவிற்குப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் எம்.வி.சண் சீ கப்பல் தொடர்பாக ஏற்கனவே வெளிவந்த செய்திகள் பலவற்றிலும் விடுதலைப்புலிகளின் கை இதன் பின்னால் இருப்பது போன்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
[மேலும்]
(3ம் இணைப்பு)
மட்டக்களப்பில் முஸ்லிம்களின் நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான உண்ணாவிரதம் கைவிடப்பட்டது
[வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 08:01 AM] []

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஆரையம்பதியில் காத்தான்குடி நகர சபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய நில ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட இன விரோத செயற்பாடுகளைக் கண்டித்தும்..... [மேலும்]

டொனால்ட் பெரேராவை பணி நீக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை அரசினால் நிராகரிப்பு
[வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 07:56 AM]
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் டொனால்ட் பெரேராவை பணி நீக்குமாறு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. [மேலும்]
பென்டகன் மீதான அல்கொய்தாவின் தாக்குதலே விடுதலைப்புலிகளின் பின்னடைவுக்கு காரணம்: கே.பி.
[வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 07:27 AM] []
அமெரிக்காவின் பென்டகன் இரட்டைக் கோபுரம் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி அல்கொய்தா இயக்கத்தினால் தாக்கப்பட்டமையே தமிழீழ விடுதலைப்புலிகளின் பின்னடைவுக்கு பிரதான காரணம் கே.பி. என்ற குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். [மேலும்]
ஐரோப்பிய, மேற்கத்தேய நாடுகளை விட, சீனா அதிக உதவி வழங்குகிறது : அரசாங்கம்
[வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 07:16 AM]
இலங்கைக்கு நிதி உதவி வழங்கி வருகின்ற பிரதான நிறுவனமாக, சீனாவின் இறக்குமதி ஏற்றுமதி வங்கி காணப்படுவதாக, பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். [மேலும்]
போர் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை என்பதனை நிரூபிக்க ஜாதிக ஹெல உறுமய முயற்சி
[வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 05:35 AM]
இலங்கையில் எவ்விதமான போர்க் குற்றச் செயல்களும் இடம்பெறவில்லை என்பதனை நிரூபிக்கும் வகையில் ஜாதிக ஹெல உறுமய கட்சிய ஆவணமொன்றை தயாரித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது. [மேலும்]
இலங்கைக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் விடுத்த கோரிக்கையை பான் கீ மூன் நிராகரிப்பு
[வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 05:24 AM]
இலங்கைக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் விடுத்த கோரிக்கையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிராகரித்துள்ளார். [மேலும்]
வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமிலுள்ளோரை உறவினர் பார்வையிட ஜே.வி.பி.ஏற்பாடு
[வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 02:08 AM]
வெலிக்கந்தைப் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று வரும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அவர்களது உறவினர்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ள ஜே.வி.பி. நாளை சனிக்கிழமை அவர்களை அங்கு அழைத்துச் செல்லவுள்ளது. [மேலும்]
"எனது மகன் இருக்கிறாரா? இல்லையா?" கண்ணீருடன் கேட்கும் தாய்மார்! உறவுகளைத் தேடி அலையும் பெற்றோர்!
[வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 02:03 AM]
வவுனியாவில் நடமாடும் நிவாரணச் சேவை நிலையத்தில் ஒன்று கூடிய இடம்பெயர்ந்த மக்களின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறியாமல் வாழ்வது தாங்கிக் கொள்ளமுடியாததொன்று என்று தாய்மார் முறையிட்டுள்ளனர். [மேலும்]
உள்ளுர் இலத்திரனியல் ஊடகம் (வெற்றி எவ்.எம்) ஒன்றின் மீது தாக்குதல்
[வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 01:55 AM]
இலங்கையின் வளர்ந்து வரும் இலத்திரனியல் ஊடகமொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சியத்த எப்.எம், சியத்த ரீ.வி, ரியல் எப்.எம்., ரியல் ரீ.வி. மற்றும் வெற்றி எப்.எம். மற்றும் வெற்றி ரீவி ஆகிய வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடக நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. [மேலும்]
முக்கோணப் பிரச்சனைக்கான இரு தரப்பின் நிர்ப்பந்தம்: பூநகரான் பார்வையில். . . .163
[வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 01:39 AM]
இன்றைக்கு சரியாக 23 ஆண்டுகளிற்கு முன், 1987 ம் ஆண்டு, யூலை மாதம் 30 ம் திகதியன்று மேற்படி தாக்குதல் காட்சிகளை உலகத்தின் தொலைக்காட்சிகள் காட்டிக் கொண்டிருந்தன. இதற்கு முதல் நாளான யூலை 29 ம் தேதி இலங்கை இந்திய ஒப்பந்தமானது இரு நாடுகளின் பாதுகாப்பு கருதி கைச்சாத்திடப்பட்டது. [மேலும்]
கிளி. தர்மபுரத்தில் இடம்பெற்ற கொள்ளைக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டி சாரதி பொலிஸாரால் கைது
[வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 01:19 AM]

கிளிநொச்சி, தர்மபுரம் 9 ஆம் யுனிட் மற்றும் 13 ஆம் யுனிட் ஆகிய இடங்களில் முச்சக்கர வண்டியொன்றில் இரவு வேளையில் சென்ற நால்வர் அடங்கிய குழு ஒன்று வீட்டைச் சோதனையிட வேண்டும் எனக் கூறி கொள்ளையடித்துக்கொண்டு தலைமறைவாகியிருந்தது. இக்கொள்ளைச் சம்பவத்தின்போது முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
[மேலும்]

ஐ.நா.வுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறு ஜப்பான் இலங்கையிடம் வலியுறுத்தல்
[வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 01:06 AM]
அரச படைகளினால் யுத்தக் குற்றச் செயல்கள் புரியப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கை, ஐ.நா.வுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஜப்பானிய வெளிநாட்டமைச்சர் கட்சூயா ஓகாடா, அமைச்சர் ஜி.எல். பீரிஸிடம் வலியுறுத்தியுள்ளார் என்று ஜப்பானிய கியோடோ செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. [மேலும்]
வடக்கின் அபிவிருத்திக்கும் அரசாங்கத்திற்கும் குமரன் பத்மநாதன் உதவிவருகின்றார்: கெஹலிய தகவல்
[வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 12:50 AM]
தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்தரீதியில் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாட்டிற்கு உதவுமாறு புலம்பெயர் தமிழர்களிடம் கேட்டிருந்தோம். அந்தவகையில், கே.பி. வடக்கின் அபிவிருத்திக்கும் அரசாங்கத்திற்கும் உதவி வருகின்றார் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். [மேலும்]
கடலில் மூழ்கும் நிலையில் இருந்து இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் காப்பாற்றப்பட்டுள்ளனர்
[வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 12:31 AM]
கடலில் மூழ்கும் அபாய நிலையில் இருந்த இலங்கை அகதிகள் உள்ளிட்ட 81 பேர், அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கிரிஸ்மஸ் தீவுக்கடற்பரப்பில் வைத்து, நேற்று முன்நாள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
[மேலும்]
Sponsor
Advertisements
"அகம் புலம் தமிழர் வாழ்வியல் மாநாடு" சிறப்புற வாழ்த்துகின்றேன்: கி.வீரமணி
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:55.06 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டியக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்தினை தெரிவித்திருந்தார். [மேலும்]
ஈழத் தமிழ் மக்களை மீட்டுச் சேர்க்க வேண்டிய மாபெரும் பணியினை நாம் மேற்கொள்ளவேண்டும்: பழ.நெடுமாறன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:52.36 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வாழ்த்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். [மேலும்]
உலகத் தமிழினம் தமிழினக் காப்பில் உடன் கவனம் செலுத்த வேண்டும்: காசி ஆனந்தன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:41.45 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற கவிஞர் காசி ஆனந்தன் தன் சிறப்பு  வாழ்த்தறிக்கை  ஒன்றினை வெளியிட்டிருந்தார். [மேலும்]
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற வாழ்த்துக்கின்றோம்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 10:13.19 PM ] []
உ.த.ப. இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற ஹம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா ஆறுமுக பாஸ்கரகுருக்கள், ஜேர்மனி அருட்திரு அந்தோனி பெர்னாண்டோ பெனற் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். [மேலும்]
(2ம் இணைப்பு)
கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதி கோரிக்கை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 08:37.04 PM ] []
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகானாடினை முன்னிட்டு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும்.. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement