| (2ம் இணைப்பு) |
| வாகரை பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை ஒப்படைப்பு: ஆலயத்தில் வைத்து வழிபாடு செய்ய நீதிமன்றம் அனுமதி |
[புதன்கிழமை, 28 யூலை 2010, 07:49 PM] [ ] |
ஞாயிற்றுக்கிழமை வெருகல் மலைச்சாரலடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வெண்கல அம்மன் கலசத்தை வாகரை பொலிஸார் எடுத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் வைத்திருந்த நிலையில் இன்று புதன்கிழமை வாழச்சேனை மாவட்ட நீதிமன்றில் ஒப்படைத்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். [மேலும்] |
| யசூசி அகாசியுடன் இலங்கை அமைச்சர்கள் ஜப்பானில் சந்திப்பு |
[புதன்கிழமை, 28 யூலை 2010, 07:43 PM] [ ] |
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரது ஜப்பானுக்கான உத்தியோக பூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கான விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். [மேலும்] |
| பிரிட்டனில் குடியேற விரும்புபவருக்கு ஆங்கிலமொழிப் பரீட்சை கட்டாயம் என அறிவிப்பு |
| [புதன்கிழமை, 28 யூலை 2010, 03:54 PM] |
ஐரோப்பாவைச் சாராத குடியேற்றவாசிகள் பிரிட்டனுக்குச் செல்வதற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அல்லது தமது கணவன் அல்லது மனைவியுடன் இணைந்துகொள்ள விண்ணப்பிக்க விரும்பினால் எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி முதல் ஆங்கில மொழிப் பரீட்சைக்குத் தோற்றுவது அவசியமாகுமென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. [மேலும்] |
| சிவந்தனின் ஐ.நா. நோக்கிய நடைப்பயணம்: டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து தெரிவிப்பு |
| [புதன்கிழமை, 28 யூலை 2010, 01:49 PM] |
பிரித்தானியாவிலிருந்து ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தனின் கடினமான இம் முயற்சி வெற்றிபெற வாழ்த்துவதுடன், தமிழ்மக்கள் அனைவரும், சிவந்தனுக்கு எமது ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டுமென டென்மார்க் இளையோர் அமைப்பு வேண்டி நிற்கின்றது. [மேலும்] |
| (2ம் இணைப்பு) |
| தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பை ஏற்படுத்த தமிழ்க் கட்சிகள் கோரிக்கை |
[புதன்கிழமை, 28 யூலை 2010, 01:31 PM] [ ] |
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான தமிழ்க் கட்சிகள் இன்று கொழும்பில் கூடி இனப்பிரச்சினை தீர்வு மற்றும் நடைமுறை விடயங்கள் குறித்து ஆராய்ந்தன. [மேலும்] |
| (2ம் இணைப்பு) |
| சிவந்தன் 5வது நாளாக ஐ.நா நோக்கிய நடை பயணத்தைத் தொடருகின்றார் |
[புதன்கிழமை, 28 யூலை 2010, 01:07 PM] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று 5வது நாளாக தனது பயணத்தை அதே உற்சாகத்துடன் தொடர்ந்து வருகின்றார். [மேலும்] |
| கால் நூற்றாண்டிற்கு மேல் பயணிகள் சேவைக்கு தன்னை அர்ப்பணித்த குமுதினிப் படகிற்கு இனியாவது ஓய்வு கொடுங்கள்: நெடுந்தீவு மக்கள் |
[புதன்கிழமை, 28 யூலை 2010, 01:04 PM] [ ] |
நேற்றைய தினம் நெடுந்தீவிற்கான பயணமொன்றை த.தே. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் ஈ.சரவணபவன் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர். இதன்போதே மக்கள் மேற்படிக் கோரிக்கையை முன்வைத்தனர். [மேலும்] |
| ஜேர்மனியில் கறுப்பு யூலை நினைவு நாள் நிகழ்வு |
[புதன்கிழமை, 28 யூலை 2010, 10:56 AM] [ ] |
ஜேர்மனி, பெர்லின் நகரில் நேற்று (27.07.2010) செவ்வாய்க்கிழமை கறுப்பு யூலை நினைவு நாள் முன்னெடுக்கப்பட்டது . [மேலும்] |
| இலங்கை கடற்படையினர் இந்தியாவுக்குள் தடையின்றி பிரவேசிப்பதாக குற்றச்சாட்டு |
| [புதன்கிழமை, 28 யூலை 2010, 10:12 AM] |
தமிழ்நாடு, இராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு பகல் நேரத்திலேயே தடையின்றி படகில் பிரவேசிக்கும் இலங்கை கடற்படையினர் குறித்து புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர். [மேலும்] |
| அவுஸ்திரேலியாவில் 8 இலங்கையர்கள் மீது விசாரணை |
| [புதன்கிழமை, 28 யூலை 2010, 10:04 AM] |
கிறிஸ்மஸ் தீவில் குழப்பத்தை விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் எட்டு இலங்கையர்கள் மீது எதிர்வரும் செப்டம்பர் மாதம் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெறவுள்ளன. [மேலும்] |
| (3ம் இணைப்பு) |
| வேலணை உத்தியோகத்தர் தர்ஷிகாவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது |
[புதன்கிழமை, 28 யூலை 2010, 09:01 AM] [ ] |
யாழ்ப்பாணம், வேலணை குடும்பநல உத்தியோகத்தர் தர்ஷிகாவின் சடலம் இன்று முற்பகல் கைதடியில் உள்ள மயானத்தில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| யாழப்பாணத்தில் தமிழரை புது விதமாக ஏமாற்றும் சிங்கள பேர்வழிகள் |
| [புதன்கிழமை, 28 யூலை 2010, 08:35 AM] |
வெளிநாட்டுத் தூதரகங்களினால் மறுக்கப்பட்ட விசாக்கள் 2 வாரங்களில் மீளப் பெற்றுத் தரப்படும் என்று பொய் சொல்லி யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களை ஏமாற்றி 5 லட்சம் வரை பணம் கறக்கும் கும்பலினால் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். [மேலும்] |
| இலங்கை விஞ்ஞானிகள் வடக்கு கிழக்கில் ஆய்வுகளை மேற்கொள்ளமுடியும்: ஜனாதிபதி |
| [புதன்கிழமை, 28 யூலை 2010, 07:06 AM] |
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டில் அமைதியான சூழல் நிலவுவதால் இலங்கையில் உள்ள விஞ்ஞானிகள் வடக்கு கிழக்கிற்கு சென்று தமது ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார். [மேலும்] |
| வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் : ஜே.வி.பி. |
| [புதன்கிழமை, 28 யூலை 2010, 04:42 AM] |
வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜே.பி.வி கோரிக்கை விடுத்துள்ளது. [மேலும்] |
| மூன்று முன்னாள் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் சுவீடன் விஜயம் |
| [புதன்கிழமை, 28 யூலை 2010, 04:36 AM] |
இலங்கையைச் சேர்ந்த மூன்று முன்னாள் சிரேஷ்ட அதிகாரிகள் சுவீடனுக்கு விஜயம் செய்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| மூன்று முக்கிய பாதாள உலக உறுப்பினர்கள் கைது |
| [புதன்கிழமை, 28 யூலை 2010, 04:34 AM] |
மூன்று முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். [மேலும்] |
| மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா பிரித்தானியா வந்தால் கைது செய்யப்படுவார்: பரிக் காடினர் |
[புதன்கிழமை, 28 யூலை 2010, 02:08 AM] [ ] |
பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியாக பொறுப்பேற்க மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா வரும் பட்சத்தில் போர்க்குற்றவாளி என அவர் கைது செய்யப்படுவார் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான பரிக் காடினர் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| கனடா, மொன்றியலில் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வு |
[புதன்கிழமை, 28 யூலை 2010, 01:59 AM] [ ] |
கடந்த 27.07.2010 ஞாயிற்றுக்கிழமை கறுப்பு யூலையின் 27 ஆம் ஆண்டு நிறைவையொட்டி ‘கறுப்பு யூலை விழிப்பு” நிகழ்வு மொன்றியலில் இல 419, St.Roch இல் அமைந்துள்ள (பழைய இமிகிறேசன்) மண்டபத்தில் நடைபெற்றது. [மேலும்] |
| வெலிக்கடை சிறையில் திடீர் பரிசோதனை என்ற போர்வையில் இம்சைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் |
| [புதன்கிழமை, 28 யூலை 2010, 01:42 AM] |
வெலிக்கடை சிறையிலுள்ள பெண்கள் திடீர் பரிசோதனை என்ற போர்வையில் இம்சைப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்] |
| ஆஸி.மெல்பேர்னில் “ஜூலை நினைவு நிகழ்வும்“ வீரத்தளபதிகள் நினைவு பாடல் இறுவட்டு வெளியீடும் |
[புதன்கிழமை, 28 யூலை 2010, 01:18 AM] [ ] |
ஈழத்தமிழர்களின் வாழ்வில் ஆறாத வடுக்களில் ஒன்றாக அமைந்த கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வும், ஜூலை மாதப் பெருநினைவுகளை சுமக்கும் தற்கொடையாளர் களுக்கான நினைவுநிகழ்வும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய விடுதலைப்புலிகளின் தளபதிகள் ஞாபகார்த்த நினைவுப் பாடல்கள்... [மேலும்] |
| இராணுவ வீராங்கனை மீது பொலிஸ் அதிகாரிகள் பாலியல் வல்லுறவு: புத்தள நிலையத்தில் சம்பவம் |
| [புதன்கிழமை, 28 யூலை 2010, 01:05 AM] |
இராணுவத்திலிருந்து தப்பியோடிய இராணுவ வீராங்கனை ஒருவர் புத்தள பொலிஸ் நிலைய அதிகாரிகளால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| கிளிநொச்சி மக்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளை மீள வழங்க நடவடிக்கை |
| [புதன்கிழமை, 28 யூலை 2010, 12:54 AM] |
கிளிநொச்சி மக்கள் வங்கியில் அடகு வைத்த நகைகள் எதிர்வரும் 4ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் கிளிநொச்சியில் அமைந்துள்ள முன்னைய வங்கிக் கட்டிடத்தில் வைத்து கடமை நாட்களில் மீள வழங்கப்படும் என முகாமையாளர் ச. ஸ்ரீகௌபாலா அறிவித்துள்ளார். [மேலும்] |
| தேசிய பாதுகாப்பின் போது சமரசத்திற்கு இடமேயில்லை: அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு |
| [புதன்கிழமை, 28 யூலை 2010, 12:33 AM] |
நாட்டிற்கு எவ்வாறான பாதுகாப்புத் தேவை என்பதனை பாதுகாப்பு அமைச்சும் அரசாங்கமுமே தீர்மானிக்கும். தேசிய பாதுகாப்பின் போது சமரசத்திற்கு இடமேயில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். [மேலும்] |
| தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் மனைவிமார் விதவைகளானது எப்படி? கெஹலியவிடம் கேள்வி |
| [புதன்கிழமை, 28 யூலை 2010, 12:25 AM] |
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு முக்கியஸ்தர்களின் மனைவிமார் விதவைகளானது எப்படி என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியினால் அமைச்சரவை பேச்சாளரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல திக்குமுக்காடிப் போனார். [மேலும்] |