செய்திகள் 2009-11-05
அமைச்சர் நந்தன குணதிலக்க, விமல் வீரவன்சவின் கட்சியிலிருந்து விலகினார்
[வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 04:19 PM]
சுற்றுலாத்துறை அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான நந்தன குணதிலக்க கட்சி அங்கத்துவத்திலிருந்து பதவி விலகியுள்ளார். [மேலும்]
ராஜ் ராஜரட்ணத்தின் பிணை தொகை குறைப்பு கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு
[வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 01:05 PM]

அமெரிக்க தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்ணத்தின் பிணை அனுமதியை நூறு மில்லியனிலிருந்து 25 மில்லியன் டொலர்களாக குறைக்க வேண்டும் என அவரின் சட்டத்தரணி கடந்த வாரம் நீதிமன்றத்தில் விடுத்திருந்த கோரிக்கை நேற்று அமெரிக்க நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]

(2ம் இணைப்பு)
செல்வம் அடைக்கலநாதன் பா.உறுப்பினரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை; நாளையும் சமுகமளிக்குமாறு பணிப்பு
[வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 12:37 PM]
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வெளிநாட்டில் தங்கியிருந்து நேற்றைய தினம் நாடு திரும்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். [மேலும்]
இதுவரை வெளிவராத...இலங்கைச் சித்திரவதை! நாலாவது மாடியில் பிரபாகரன் பெற்றோர்! : ஆனந்த விகடன்
[வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 12:03 PM] []
பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் இப்போது சிங்கள அரசின் முரட்டுச் சித்திரவதைகளில் அவதிப்பட்டு வருவதாகக் கடல் கடந்து வரும் தகவல்கள்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் வேதனை வலியைப் பரவ வைத்திருக்கிறது. இவ்வாறு தமிழக வார சஞ்சிகை ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது. [மேலும்]
ஈழத்தில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு திருப்பதி கோவிலில் பட்டாபிஷேகம் செய்வதா? மத்திய அரசு மீது வைகோ பாய்ச்சல்
[வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 10:47 AM]
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவுக்கு திருப்பதியில் பட்டாபிஷேகம் செய்துள்ளது மன்மோகன் அரசு. இதற்கு தமிழக முதல்வர் கருணாநிதியும் உடந்தையாக இருந்துள்ளார். இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

[மேலும்]
மாறிவரும் உலக ஒழுங்கிற்கமைய தற்காலிகமாக ஏற்பட்டுள்ள சார்பு நிலையினை நிரந்தரமானதாக்கி சுதந்திர தமிழீழம் காண்போம்: இரா.மயூதரன்
[வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 09:52 AM]
ஈழத்தமிழர்களது பாதுகாப்பு அரனாக முப்பதாண்டுகளிற்கு மேல் விளங்கிய தமிழீழ அரசும் அதன் கட்டுமானங்களும் கடந்த மே 17ம் திகதியுடன் அழிக்கப்பட்டதாக கூறி வெற்றிக் கொண்டாட்டங்களில் திழைத்துவந்த சிங்கள, இந்திய அரசுகள் தற்போது தமது கூற்றுக்களை மறுதலிக்க முற்பட்டுள்ளன. [மேலும்]
படையினரால் சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற மனைவியை 6 மாதங்களாக காணவில்லை: கணவன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையீடு
[வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 09:28 AM]
முல்லை. மாத்தளன் பகுதியில் படையினருக்கும், புலிகளுக்கும் இடையில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடைபெற்ற கடும் போரின்போது பதுங்குகுழியில் இருந்தபோது காயமடைந்த தனது மனைவியை படையினர் சிகிச்சைக்காக அநுராதபுரத்திற்குக் கொண்டு சென்றனர். அதன் பின்பு அவரை காணவில்லை என அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
[மேலும்]
சரத் பொன்சேகா நாடு திரும்பியுள்ளார்
[வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 08:10 AM]
இலங்கையின் கூட்டுப்படை தளபதி, சரத் பொன்சேகா இன்று அதிகாலை 5.30 அளவில் நாடு திரும்பியுள்ளார்.
  [மேலும்]
ஐ.நா. வின் விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்
[வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 05:44 AM]
ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பெற்றிக் கம்ரெட் எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  [மேலும்]
சம்பள உயர்வு வழங்குவதாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி போலியானது : லால்காந்த
[வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 05:37 AM]
சம்பள உயர்வு வழங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ள உறுதிமொழி போலியானதென ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
[மேலும்]
யாழ்ப்பாணத்தில் குடியேறுவதற்கு 20,000 சிங்கள, முஸ்லிம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளனர்: ரிசாட் பதியூதீன்
[வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 05:32 AM]
யாழ்பாணத்தில் குடியேறுவதற்கு சுமார் 20,000 சிங்கள, முஸ்லிம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். [மேலும்]
மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அமெரிக்காவின் ஓர் சூழ்ச்சித் திட்டமாகும்: அரசாங்கம்
[வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 05:23 AM]
மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைகள் அமெரிக்காவின் ஓர் சதித்திட்டம் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.  [மேலும்]
தலைவர் பிரபாகரனின் தந்தையின் ஓய்வூதியக் கொடுப்பனவு ரத்து: ஓய்வூதிய ஆணையாளர் தகவல்
[வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 05:19 AM]
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. [மேலும்]
முப்படையினரின் சம்பளங்கள் உடனடியாக உயர்த்தப்படும்: ஜனாதிபதி
[வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 05:14 AM]
பயங்கரவாதத்திற்கு எதிராக வெற்றிகரமாக போராட்டத்தை முன்னெடுத்த முப்படையினரது சம்பளங்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
[மேலும்]
முகாமில் உள்ள மின்கம்பத்தின் கீழ் இருந்துதான் படித்தேன்: தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய இடம்பெயர் மாணவன்
[வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 02:54 AM]
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்காக நாம் முகாமில் இருந்த மின்கம்பத்தின் கீழ் இருந்துதான் படித்தோம். இவ்வாறு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 164 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடம் பெற்ற மாணவன் தவபாலன் அறிவன் தெரிவித்துள்ளார். [மேலும்]
இந்தோனேசியாவில் தடுத்து வைத்துள்ள 78 இலங்கையர் தொடர்பில் முடிவு காண ஆஸிக்கு 24 மணிநேர காலக்கெடு
[வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 02:37 AM]
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றவேளை கைது செய்யப்பட்டு இந்தோனேஷியத் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 78 இலங்கையர் தொடர்பாக
அவுஸ்திரேலிய அரசு இறுதி முடிவை எடுக்க இந்தோனேஷிய அரசு 24 மணிநேரக் காலக்கெடு விடுத்துள்ளது. [மேலும்]
பம்பலப்பிட்டி கடலில் நடந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்து நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்
[வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 02:07 AM] []
பம்பலப்பட்டி கடலில் தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. [மேலும்]
கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் 61 பேர் பொலிஸாரால் கைது
[வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 01:56 AM]
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் பேரணி நடத்திய வேலையில்லாப் பட்டதாரிகள் 61 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
இலங்கையரை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய 4 சந்தேக நபர்கள் கைது
[வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 01:42 AM]
இலங்கைப் பிரஜைகளை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நான்கு சந்தேக நபர்களை இரகசியப் பொலிஸார் கைது செய்துள்ளனர். [மேலும்]
சாகடிக்கப்பட்ட சகோதரனுக்காக சர்வதேசங்களில் வாழும் உறவுகளே! கண்ணீர் சிந்துங்கள். காரணம் கேளுங்கள்: அகத்தியன்
[வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 01:22 AM]
ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பு இன்று  இலங்கை அரசினால் மிகவும் கொடிய காட்டுமிராண்டித் தனமானதாகவும், கட்டுக்கடங்காத நிலையையும் நோக்கி வளர்ந்து செல்வதை
சர்வதேசம் கண்டுகொள்ளுமா? இல்லை கண்களை இறுக மூடிக்கொள்ளுமா என்ற பெரும் கேள்விக்குறியுடன் சர்வதேசத்தை உலகத் தமிழினம் உன்னிப்பாகக் காத்திருக்கின்றது. [மேலும்]
நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் அறிக்கை: வி.உருத்திரகுமாரன்
[வியாழக்கிழமை, 05 நவம்பர் 2009, 12:58 AM]
இடைக்கால நாடுகடந்த தமிழீழ அரசுக்கான ஆலோசனைக் குழு தனது முழுமையான அறிக்கையை 2009 டிசம்பரில் வெளியிடுவதற்குரிய இலக்குடன் பணிகளை உரிய வேகத்தில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. [மேலும்]
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்