| ஈழத்தமிழர்களுக்காக சீமான் அவர்கள் வழங்கியநேர்காணல். (வீடியோ) |
| [திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 09:20 PM] |
ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை, புலம் பெயர் தமிழர்கள் அல்லல் படும் எமது உறவுகளுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் மற்றும் நாம் தமிழர் இயக்கத்தினை பற்றி சீமான் அவர்கள் அளித்த நேர்காணல் [மேலும்] |
| இலங்கையின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சர்வதேச நீதிமன்றங்கள் அவசியமில்லை: ஜனாதிபதி |
| [திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 03:29 PM] |
இலங்கையின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள சர்வதேச நீதிமன்றங்கள் மற்றும் குழுக்கள் அவசியமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். [மேலும்] |
| கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க அதிகாரிகளால்,ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் |
| [திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 01:49 PM] |
இந்த வருடம் ஐ.நா. சபை அமர்வுக்காக இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சென்றிருந்த வேளை, அமெரிக்க குடிவரவுத்துறை அதிகாரிகள், அவரை சுமார் ஒரு மணித்தியாலமாக விசாரணைக்கு உட்படுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| தெரிந்த உண்மைகளை அமெரிக்காவில் வெளிப்படுத்த வேண்டாம் என சரத் பொன்சேகாவுக்கு இலங்கை அரசு தெரிவிப்பு |
| [திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 01:49 PM] |
 அமெரிக்க அதிகாரிகளினால், விசாரணை செய்யப்படும் போது தனக்கு தெரிந்த உண்மைகளை வெளிப்படுத்தவேண்டாம் என கூட்டுப்படை தலைமையதிகாரி சரத் பொன்சேகாவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.
[மேலும்]
|
| இலங்கையில் புதிய பொலிஸ் மா அதிபர் இன்று நியமனம் |
| [திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 01:33 PM] |
இலங்கையின் புதிய பொலிஸ் மா அதிபராக, மஹிந்த பாலசூரிய இன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்] |
| இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்காக 12 கோடி ரூபா ஒதுக்கீடு |
| [திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 01:24 PM] |
இந்தியா, தமிழ்நாட்டில் 115 முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முகமாக 12 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது. [மேலும்] |
| கோத்தபாயவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இலங்கை ஆட்சேபனை தெரிவிப்பு |
| [திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 01:11 PM] |
அமெரிக்காவில் உள்ள கூட்டுப்படை தலைமை அதிகாரி சரத் பொன்சேகாவிடம், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான சாட்சியங்களைப் பெறமுயல்வது தொடர்பாக அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டினஸை இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகல்லாகம சந்தித்து ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார். [மேலும்] |
| ஜேர்மனி நூறன்பேர்க் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் நினைவு வணக்க நிகழ்வு |
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 12:57 PM] [ ] |
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஆறு வேங்கைகளின் 2ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும் இலங்கை - இந்திய கூட்டுச்சதியில் பலியான குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவு வணக்க நிகழ்வு ஜேர்மனி நூறன்பேர்க் நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. [மேலும்] |
| இந்தோனேசியா கப்பலில் சிறை வைக்கப்பட்டுள்ள 78 இலங்கை அகதிகள் டெலிபோனில் தற்கொலை மிரட்டல் |
| [திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 10:04 AM] |
 இந்தோனேஷியாவில் கியா தீவில் உள்ள தான்ஜங் பிளாங் துறைமுகத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள 78 இலங்கை தமிழர்களும், தங்கள் கப்பலை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும். இல்லையென்றால் அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று சுங்க அதிகாரிகளிடம் டெலிபோனில் மிரட்டல் விடுத்துள்ளனர். [மேலும்] |
| கனேடிய தமிழ் இளையோர் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ தேசியக்கொடி முன்மொழிவும், தொடர் விழிப்புணர்ச்சி நிகழ்வும் |
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 08:36 AM] [ ] |
உலகெங்கும் பரந்து வாழும் தமிழரனான எமக்கு தமிழீழத் தேசியக் கொடியே எமது வரலாறு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான தியாகங்களை எடுத்தியம்புகின்றது. இத்துடன் ஓர் நாட்டின் தேசியச் சின்னங்களானவை அந்நாட்டின், அந்த நாட்டு மக்களின், அரசியல் அபிலாசைகளைக் குறித்து நிற்கும். [மேலும்] |
| பிரான்சில், பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் 2 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு |
[திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 05:18 AM] [ ] |
தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப. தமிழ்செல்வன் அவர்களின் 2 ம் வருட நினைவு வணக்க நிகழ்வு, பிரான்சில் எதிர்வரும் 07.11.2009 சனிக்கிழமை Trocadero என்னும் இடத்தில் பி.பகல் 15.30க்கு நடைபெறவுள்ளது. [மேலும்] |
| நெதர்லாந்திலிருந்து திருப்பி அனுப்பப்படவிருக்கும் தமிழ் அகதிகளைக் காப்பாற்ற நடைபெற்ற அவசர ஒன்றுகூடல் |
| [திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 05:01 AM] |
நெதர்லாந்தில் தற்போது அரசியல் அடைக்கலம் நிராகரிக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்காக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை காப்பாற்ற நெதர்லாந்திலுள்ள பல தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் (31.10.2009) சனியன்று உத்ரெக் நகரில் அவசரமாகச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். [மேலும்] |
| இலங்கை அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமரின் நிலைப்பாடு அதிருப்தியளிக்கின்றது: தொழிற்சங்கங்கள் |
| [திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 04:47 AM] |
இலங்கை சடட்விரோதக் குடியேறிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்டின் நிலைப்பாடு அதிருப்தியளிப்பதாக அந்நாட்டு தொழிற்சங்க அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. [மேலும்] |
| இராணுவ வீரர்கள் அரசியலில் ஈடுபடுவதனை அரசாங்கம் தடுக்கவில்லை: கோத்தபாய |
| [திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 04:41 AM] |
இராணுவப் படைவீரர்கள் அரசியலில் ஈடுபடுவதனை அசராங்கம் ஒருபோதும் தடுக்காது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [மேலும்] |
| இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இரண்டாவது உயர்மட்ட சந்திப்பு இடம்பெறவுள்ளது |
| [திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 04:33 AM] |
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உயர் மட்ட கலந்துரையாடல்கள் வெகு விரைவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் சகோதரர்களான பசில் ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் இந்தியா செல்லவுள்ளனர். [மேலும்] |
| இலங்கை நீதிபதிகள், அவுஸ்திரேலியா ஊடாக பிஜி செல்ல விசா அனுமதி மறுப்பு |
| [திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 04:28 AM] |
நிகழ்வு ஒன்றுக்காக பிஜி தீவுக்கு புறப்பட்டுள்ள, இலங்கையின் நீதிபதிகளும், நீதிவான்களுக்கும், அவுஸ்திரேலியா ஊடாக பிஜி செலவதற்கான விசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| யுத்தக்குற்றம் தொடர்பில் அமெரிக்கா, தம்மிடம் விளக்கம் கோரலாம் என ஜனாதிபதி ராஜபக்ச தெரிவிப்பு |
| [திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 04:18 AM] |
சரத் பொன்சேகாவை அமெரிக்கா விசாரணை செய்யப் போவதாக வெளியான தகவல், தொடர்பில், யுத்தக்குற்றம் தொடர்பாக அமெரிக்கா எதனையும் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அதனை தம்மிடம் கேட்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். [மேலும்] |
| (2ம் இணைப்பு) |
| அவுஸ்திரேலியாவில் படகு மூழ்கியதில் 11 இலங்கையர்கள் காணாமல் போயுள்ளனர்: ஒருவரின் சடலம் மீட்பு |
| [திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 04:06 AM] |
இலங்கையர்களும் உள்ளடங்கியிருக்கலாம் என நம்பப்படும் சட்டவிரோத படகு ஒன்று, அவுஸ்திரேலிய வடமேற்கு கடற்பரப்பில் கடலில் இன்று மூழ்கியுள்ளது. படகில் இருந்து காணாமல் போன குறைந்தது 11 இலங்கையர்களை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
[மேலும்] |
| அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன |
| [திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 04:01 AM] |
அரசாங்க அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 12 பேர் கைது |
| [திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 03:56 AM] |
நீர்கொழும்பு துவா என்ற பிரதேசத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 12 பேரை குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். [மேலும்] |
| ஜனாதிபதியை விமர்சித்த சிங்கள இளைஞன் கைது |
| [திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 03:02 AM] |
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை இணையத்தளத்தினூடாக தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள இளைஞன் ஒருவரை இரகசிய பொலிஸார் கைது செய்துள்ளனர். [மேலும்] |
| மர்மமான முறையில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு: தியத்தலாவ முகாமில் சம்பவம் |
| [திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 02:52 AM] |
தியத்தலாவ இராணுவ முகாமில் மர்மமான முறையில் சார்ஜன்ட் தரத்திலான இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். [மேலும்] |
| சரத் பொன்சேகாவை தேவையற்ற விதத்தில் விசாரணை செய்தால் கடும் நடவடிக்கை: ஜே.வி.பி. தலைவர் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை |
| [திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 02:45 AM] |
 சரத் பொன்சேகாவின் கிரீன் காட், வதிவிட அனுமதியை நீடிப்பதற்காக சாதாரண விசாரணைகள் நடத்தப்படலாம்.ஆனால் தேவையற்ற வகையில் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். [மேலும்] |
| இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவுப்பொருள் வியாபாரிகளால் கடத்தப்பட்டு விற்பனை: பருப்பு, மாவுடன் லொறி பிடிபட்டது |
| [திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 02:14 AM] |
இடம்பெயர்ந்து நிர்க்கதியாகியுள்ள மக்கள் மத்தியில் விநியோகிப்பதற்கென நட்பு நாடொன்றினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட, கோதுமை மா மூடைகளும், பருப்பு மூடைகளும் திருட்டுத்தனமாக வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. [மேலும்] |
| சரத் பொன்சேகா மீது அமெரிக்கா விசாரணை நடத்துவதை தடுக்க, இலங்கை அரசு பகீரதப் பிரயத்தனம் |
| [திங்கட்கிழமை, 02 நவம்பர் 2009, 02:05 AM] |
வன்னிப் போர்க்களத்தில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்த நிகழ்வுகள் குறித்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விசாரிப்பதற்கு அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு, இலங்கை அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நேற்றிரவு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்] |