செய்திகள் 2009-11-01
இந்தோனேசியாவில் உள்ள இலங்கையர்கள் அகதிகளா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது
[ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 03:30 PM]
இந்தோனேசிய கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ள ஓசியானிக் விக்கிங் கப்பலில் இலங்கையர்கள், உண்மையில் அகதிகளா என அவுஸ்திரேலியாவின் முதலாம் செனட் உறுப்பினர் ஸ்டீவ் பீல்டிங் கேள்வி எழுப்பியுள்ளார். [மேலும்]
புகலிடம் கோருவோர் தொடர்பில் இலங்கையின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும்: இந்தோனேசியா
[ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 02:03 PM]
புகலிடம் கோருவோர் தொடர்பில் இலங்கையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தோனேஷிய அரசாங்கம் அறிவித்துள்ளது. 
  [மேலும்]
இலங்கையில் எதிர்வரும் 11 ம் திகதி முதல் பாரிய தொழிற்சங்கப் போராட்டம்
[ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 01:12 PM]
இலங்கையில், ஐயாயிரம் ரூபா சம்பள உயர்வைக் கோரி, எதிர்வரும் 11 ம் திகதியில் இருந்து காலவரையறையற்ற வகையில் கோரிக்கை நிறைவேறும் வரை, மாபெரும் சட்டப்படி வேலையியக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது [மேலும்]
கோத்தபாயவுக்கு எதிராக சாட்சியங்களை தருமாறு அமெரிக்கா சரத் பொன்சேகாவிடம் கோரியுள்ளது
[ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 01:00 PM]
இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சாட்சியம் வழங்குமாறு தாம் அமெரிக்க அதிகாரிகளால் கோரப்பட்டுள்ளதாக கூட்டுப்படைத் தலைமை அதிகாரி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். [மேலும்]
பம்பலப்பிட்டி கொலைச் சம்பவத்தில் கைதான பொலிஸ் கான்ஸ்டபிளை விளக்க மறியலில் வைக்க உத்தரவு
[ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 10:52 AM]
கொழும்பு, பம்பலப்பிட்டி கடலில் அடித்துக் கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன் மரணத்துடன் சம்பந்தப்பட்டவரென சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். [மேலும்]
யாழ். குடாநாட்டில் இருந்த வீதியோர காவலரண்கள் பல நேற்று அகற்றல்
[ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 10:37 AM]
தெல்லிப்பளை, மல்லாகம், சுன்னாகம் கோண்டாவில் ஆகிய பகுதிகளில் வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த வீதியோரக் காவலரண்கள் இராணுவத்தினரால் நேற்று அகற்றப்பட்டுள்ளன. [மேலும்]
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க தீர்மானம்: கி.மா.முதலமைச்சர்
[ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 09:34 AM]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தமது கட்சியாகிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு முழு ஆதரவையும் வழங்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமாகிய சிவனேசத்துரை சந்திரகாந்தன் கூறுகின்றார். [மேலும்]
பிரான்சின் மனிதநேயப் பணியாளர்கள் மீதான இறுதிக் கட்ட விசாரணையும், தீர்ப்பும்
[ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 05:19 AM] []

கடந்த 2007 ஏப்ரல் 1 ம் திகதி பிரான்சில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்களின் தாயக செயற்பாட்டாளர்களின் இறுதி கட்டவிசாரணைகள் பாரிஸ் மத்திய நீதிமன்றத்தில் பிரதான மூன்று நீதிபதிகளின் முன்னிலையில் கடந்த 12 ம் திகதி முதல் நடைபெற்று வருவதை யாவரும் அறிந்ததே அதன் இறுதி விசாரணைகள் 26 ம், 27ம், 28 ம் திகதிகளில் நடைபெற்றன. [மேலும்]

மஹிந்தவின் யுத்த தேனிலவு முடிவுக்கு வருகிறது: ஓர் ஆய்வு
[ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 04:47 AM]
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் “யுத்த தேனிலவு” முடிவுக்கு வந்துள்ளது. அண்மையில், பெற்றோலிய பணியாளர்களும், மாணவர்களும் நடத்திய போராட்டங்கள் இதனை எடுத்துக்காட்டுக்கின்றன. [மேலும்]
உலகமெங்கிலும் புலம்பெயர் தமிழர்கள் நாடு கடத்தப்படக் கூடிய அபாயம் நிலவுகிறது – ரிவிர
[ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 04:41 AM]
உலகமெங்கிலும் புலம்பெயர் தமிழர்கள் நாடு கடத்தப்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாக ரிவிர பத்திரிகை பிரதான செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
ஜனாதிபதிக்கு நெருக்கமான 278 பேர் அரசின் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்
[ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 04:38 AM]
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நெருக்கமான சுமார் 278 பேர் அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[மேலும்]
அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள சரத் பொன்சேகாவிடம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை
[ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 04:32 AM]
அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும்; கண்ணிவெடிகள் அகற்றப்படுவதென்பது அடிப்படையற்ற பொய் தமிழ்தேசியக்கூட்டமைப்பு
[ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 04:26 AM]
கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும், கண்ணிவெடிகள் அகற்றப்படுவதாக அரசாங்கத்தினால், தெரிவிக்கப்படும் தகவல் பொய்யானதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. [மேலும்]
இலங்கை அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக உலக நாடுகள் அதிருப்தி : கனடிய லிபரல் கட்சி பிரமுகர் தெரிவிப்பு
[ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 04:09 AM]
இலங்கை அரசு தமிழ் மக்களையும் இடம்பெயர்ந்து வாழும் அகதிகளையும் நடத்தும் விதம் பற்றி உலக நாடுகள் பல அக்கறை கொண்டுள்ளன. அந் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியும் அடைந்துள்ளன.என கனடாவின் லிபரல் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், அக் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான பேச்சாளருமான போப் றே தெரிவித்தார். 
[மேலும்]
ஒப்பறேசன் தமிழீழம்: பாகம் 2 - கீர்த்திகன்
[ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 03:48 AM]
சிங்கள தேசமும் தமிழ் இன எதிரிகளும் தமிழினத்திற்கு விடும் சவால்கள் என்ன? அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றோம்? என்கின்ற கேள்விகளோடும் அவற்றிற்கான பதில்களை, அடுத்தவாரத்திலிருந்து ஆரம்பிக்கும் எண்ணத்துடனேயுமே முதல் கட்டுரை (ஒப்பறேசன் தமிழீழம் - பாகம் 1) நிறைவு செய்யப்பட்டிருந்தது. [மேலும்]
குடாநாட்டிலிருந்து வெளியிடங்களுக்கு சுதந்திரமாக செல்ல அனுமதியுங்கள்: யாழ். மக்கள் கோரிக்கை
[ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 03:33 AM]
நாட்டில் 30 வருடங்களாக நிலவிய யுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்டு நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் நிலை நாட்டியதுடன் யாழ். குடாநாட்டில் சிவில் நிர்வாகத்தையும் நடைறைப்படுத்தி வருகிறோம் என அரசாங்கம் பிரசாரம் செய்து வருகிறது. ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் சுதந்திரமாகவும் குறைந்த செலவிலும் நேரடியாக செல்ல முடியாத நிலையுள்ளது. [மேலும்]
இலங்கையின் இரகசிய பொலிஸ் பிரிவில் பாரிய முறைகேடுகள்;பல அதிகாரிகள் இடமாற்றம்
[ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 03:21 AM]
இலங்கையின் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், 10 ஆயிரம் ரூபாவுக்காக கூட பாரிய குற்றங்களை மறைத்து குற்றவாளிகளை காப்பாற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
பாரிய போராட்டம் ஒன்று குறித்து, தொழிற்சங்கங்கள் இன்று அறிவிக்கவுள்ளன
[ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 03:07 AM]
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், நீர் வழங்கல் சபை தொழிற்சங்கங்கள் உட்பட்ட 27 தொழிற்சங்கங்கள், பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்று குறித்த அறிவித்தலை இன்று வெளியிடவுள்ளன. [மேலும்]
தமிழர் பிரச்சினையில் முதல்வருக்கு உறுதியான நிலைப்பாடு இல்லை: உலக செம்மொழி மாநாடு விமர்சனத்திற்குள்ளாவதற்கு இதுவே காரணம்: சிவத்தம்பி
[ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 02:53 AM]
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உறுதியான நிலைப்பாடு இன்றியும் எமக்கு ஆதரவு தெரிவிக்காத நிலையிலும் தமிழக முதல்வர் மு.கருணாநிதி செயற்படுவதன் காரணமாக உலக செம்மொழி மாநாடு பலத்த விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது அதிருப்தியையும் எதிர்ப்பினையும் தெரிவித்து வருகின்றனர் என பேராசிரியர் கா. சிவத்தம்பி கூறினார். [மேலும்]
காணாமல் போனவர்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு உண்டா? :யாழ்.வலம்புரி நாளிதழ்
[ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 02:25 AM]
காணாமல் போனவர்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு உண்டா? என யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழ் கேள்வி எழுப்பியுள்ளது. [மேலும்]
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்