| தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் என்று கருணாநிதியை வரலாறு தூற்றும் |
| [ Wednesday, 18 November 2009, 04:44.28 AM ] |
முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் சிங்களப் படையினால் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட போது தில்லியில் முகாமிட்டு மகன், மகள்,பேரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க தவம் கிடந்த கருணாநிதி இப்போதுதான் விடுதலைப்புலிகளின் பிழைகளைச் சுட்டிக் காட்டித் தான் மெளனமாக அழுவதாகப் புலம்புகிறார். |
| வஞ்சம் தீர்க்கும் இலங்கை அரசும், வடிவம் மாறும் தமிழின அழிப்பும் |
| [ Sunday, 15 November 2009, 08:45.57 AM ] |
ஈழத்தமிழினத்தை முற்றுமமுழுதாக அழிக்கும் நடவடிக்கையில் மஹிந்த ராஜபக்ச அரசு மிகவும் தீவிரம் காட்டி வருகின்றது. பயங்கரவாதம் என்ற பெயரைச் சொல்லிக் கொண்டு விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலான அப்பாவித் தமிழ்மக்களை கொன்று குவித்ததுடன், யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக...... |
| சூடாகி வரும் சிங்களத்தின் தேர்தல் களமும், திக்கற்ற ஈழத் தமிழர்கள் நிலையும்! |
| [ Tuesday, 10 November 2009, 12:22.57 PM ] |
இலங்கைத் தீவில் யுத்த களம் தற்காலிக ஓய்வுக்கு வந்த நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 2010-ம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆட்சியைத் தமதாக்கிக் கொள்வதற்கான காய் நகர்த்தல்களில் சிங்களப் பேரினவாதப் பெரும் கட்சிகள் இரண்டும் வேகமாகச் செயற்பட்டு வருகின்றன. |
| மனிதாபிமானத்திற்கான மற்றுமோர் மணிமகுடம் : அகத்தியன் |
| [ Sunday, 08 November 2009, 05:49.32 AM ] |
மனிதாபிமானத்திற்கு மகத்துவம் மிக்க பிரான்ஸ் நாட்டின் மற்றுமோர் மணிமகுடமணிந்து சிறப்பித்துள்ள முன்னாள் மூத்த தூதுவர் பிரான்சுவா ஜுமேரி அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளுகின்றார்கள் எல்லையற்ற தமிழர். |
| ஒப்பறேசன் தமிழீழம்: பாகம் 2 - கீர்த்திகன் |
| [ Sunday, 01 November 2009, 03:48.04 AM ] |
சிங்கள தேசமும் தமிழ் இன எதிரிகளும் தமிழினத்திற்கு விடும் சவால்கள் என்ன? அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றோம்? என்கின்ற கேள்விகளோடும் அவற்றிற்கான பதில்களை, அடுத்தவாரத்திலிருந்து ஆரம்பிக்கும் எண்ணத்துடனேயுமே முதல் கட்டுரை (ஒப்பறேசன் தமிழீழம் - பாகம் 1) நிறைவு செய்யப்பட்டிருந்தது. |
| மகிந்த ராஜபக்ஷவும் 'அரசியல் கோமாளி' கருணாநிதியும்! : ஈழநாடு 'பாரிஸ்' |
| [ Friday, 23 October 2009, 10:25.27 AM ] |
மகிந்த ராஜபக்ஷவால் 'அரசியல் கோமாளி' என்று வர்ணிக்கப்பட்ட கருணாநிதி அவர்கள் அனுப்பிவைத்த பத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைத் தீவுக்கு சுற்றுப்பயணம் செய்து திரும்பியுள்ளனர். சிங்கள அரசால் வழங்கப்பட்ட தடல் புடல் மரியாதைகளினால் உள்ளம் குளிர்ந்துபோன இவர்கள் தாம் சென்ற இடங்களில் எல்லாம் அல்லல்படும் தமிழர்களின் அவலங்கள் குறித்துப் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. |
| ஐந்தாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகிவிட்டது? : பாரிஸ் 'ஈழநாடு' |
| [ Tuesday, 20 October 2009, 11:06.42 AM ] |
வட்டுக்கோட்டையில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் முடிவுற்றதாக சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட ஈழத் தமிழர்களது விடுதலைப் போர் புதிய பரிமாணங்களோடு புலம்பெயர் தேசங்களில் பலம் பெற்று வருகின்றது. இது சிங்கள தேசம் முற்றிலும் எதிர்பார்க்காத புதிய களமாக அமைந்துள்ளது. |
| ஒப்பறேசன் தமிழீழம்: பாகம் 1 - கீர்த்திகன் |
| [ Saturday, 17 October 2009, 11:27.14 AM ] |
அன்பானவர்களே! ஒவ்வொரு சராசரி மனிதனிற்கும் தன் மொழி மீதும் தன் இனம் மீதும் இருக்கும் கடமையும் உரிமையும் எனக்கும் இருப்பதாலேயே நான் ஒரு தமிழனாய் என் தாய்மொழியும் தாய் நாடும் தமிழ் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்களை மையமாக வைத்து காலத் தேவை கருதி மிக அவசரமாகவும் தெளிவாகவும் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன். |
| இலங்கை அரசு புலம்பெயர் தமிழருக்கு நீட்டும் இலவச மக்டொனால்ஸ்: கீர்த்திகன் |
| [ Saturday, 10 October 2009, 11:22.37 AM ] |
இந்தக் கட்டுரையை எழுதுவதன் நோக்கம் யார் மீதும் உள்ள தனிப்பட்ட வெறுப்போ அல்லது யாரையும் புண்படுத்துவதோ அல்ல மாறாக தலை மொட்டைபோல் தெரிகிறதென்பதற்காக மிளகாய் அரைக்க நினைக்கக் கூடாதென்பதற்காகவும் தமிழினம் சந்திக்கும் சந்திக்க இருக்கும் மிகப்பெரும் சவால்களை தொட்டுச் செ(சொ)ல்வதற்குமேயாகும். |
| புதிதாக முளைக்கும் பிரச்சினைகள்: இலங்கை அரசாங்கத்தினால் சமாளிக்க முடியுமா? |
| [ Sunday, 04 October 2009, 03:43.51 AM ] |
இலங்கை அரசின் முழுவீச்சான போரை எதிர்கொள்வதில் புலிகள் இயக்கம் எப்படி நெருக்கடிகளை சந்தித்ததோ, அதுபோன்றே சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு இப்போது அடுக்கடுக்கான பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கின்றன. எங்கிருந்து, எப்படியெல்லாம் இந்தப் பிரச்சினைகள் முளைக்கின்றன என்றே தெரியாத வகையில் அரசாங்கத்துக்கு நெருக்கடிகள் வலுவடைந்து வருகின்றன. |
| புலம்பெயர் தமிழர்களது பலம் யாராலும் சிதைக்க முடியாதது! : பாரிஸ் ஈழநாடு |
| [ Monday, 28 September 2009, 04:12.29 PM ] |
புலம்பெயர் தமிழர்களது பலம் யாராலும் சிதைக்க முடியாதது. எங்கள் மக்களுக்காகவும், எங்கள் மண்ணுக்காகவும் நாங்கள் கொண்ட போர்க்கோலம் தமிழீழம் மலரும்வரை தொடரும். இவ்வாறு பரிஸிலிருந்து வெளிவரும் இன்றை ஈழநாடு பத்திரிகையில் பிரசுரமாகியுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
| தமிழீழ மக்களது ஆணையினை அடகு வைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது |
| [ Thursday, 24 September 2009, 03:08.23 AM ] |
அமெரிக்க அரசு, விடுதலைப் புலிகள் மீது பல்வேறு அழுத்தங்களையும், தடைகளையும் ஏற்படுத்தி, இலங்கை அரசின் யுத்தகள வெற்றிக்குத் துணை நின்றதால், தமிழீழ மக்களுக்கு இருந்த ஒரே ஒரு பாதுகாப்புக் கவசமும் தகர்த்து எறியப்பட்டுள்ளது. இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு இதழ் தெரிவித்துள்ளது. |
| தனிமைப்படுத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கும் இலங்கை அரசு |
| [ Sunday, 13 September 2009, 05:48.33 AM ] |
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹனவுக்கு பிரித்தானியா விஸா வழங்க மறுத்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தனிப்பட்ட ரீதியில் விஸாவுக்கு விண்ணப்பித்ததால் தான் நிராகரிக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறது பிரித்தானியத் தூதரகம். |
| ஈழத் தமிழரின் துயரத்திற்கு காங்கிரஸே காரணம் |
| [ Wednesday, 09 September 2009, 04:09.50 PM ] |
எந்த வகையிலும் தமிழர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு விரோதமாக செயல்பட வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு எப்போதும் இல்லை. தமிழின விரோதப் போக்கை மத்திய அரசு கடைப்பிடிக்கிறது என்பது தேவையற்ற வாதம்” என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார். |
| வரும் நாட்களில் எங்களின் பயணப்பாதை மாறலாம். ஆனால் இலக்கு ஒன்று தான்: அரவிந்தன் |
| [ Sunday, 06 September 2009, 02:07.55 PM ] |
என் இனமே என் சனமே என்னை உனக்குத் தெரிகிறதா......? எனது குரல் புரிகிறதா..? வணக்கம் எனது இரத்த, இன, மொழி பேசுகின்ற உறவுகளே. இங்கு எங்களை விட்டு தூரப் போய்க் கொண்டே இருக்கிறீர்களோ? தெரியவில்லை உங்களைப் பிணைத்திருக்கும் பாசக்கயிறுகளையா? அல்லது உங்களைச் சுற்றி ஏற்பட்ட மாய வலைகளையா? என்பது எங்களுக்கு விளங்கவில்லை என் தமிழ் உறவுகளே. உங்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. |
|
|
| காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்! |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ] |
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்] |
| சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல் |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ] |
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்] |
| சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ] |
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர் ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்] |
| பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா |
| [ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ] |
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்] |
| தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு |
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] [ ] |
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்] |
|