Switch to
செய்திகள்
இலங்கைத் தமிழர் ஒருவர் லண்டன் விபத்தில் மரணம்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 09:30.51 AM ]
பிரித்தானியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் உயிரிழந்தார். லண்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 06.20 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
இலங்கை விவகாரத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் இரட்டை வேடம்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 09:05.12 AM ]
கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியப் பட விழாவுக்கு இந்தியாவைச் சேர்ந்த எந்த நடிகர், நடிகையும் போகக் கூடாது என திரையுலகினர் கூடி போட்ட தீர்மானத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒப்புக் கொண்டு யாரும் போகக் கூடாது என கேட்டுக் கொண்டிருந்தது. [மேலும்]
(2ம் இணைப்பு)
சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடை பயணத்திற்கு தெம்பூட்ட மக்களை அழைக்கும் உதவியாளர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 09:01.19 AM ] []
இலங்கை அரசு மீதான சுயாதீன போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதி கேட்டு சிவந்தன் மேற்கொண்டுள்ள பயணம் 42 மைல்களை எட்டியுள்ளது. [மேலும்]
ராஜபக்ச-ரணில் இரகசிய உடன்பாட்டுக்குள் புதைந்துள்ள உண்மைகள் என்ன?
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 07:37.39 AM ]
அரசியல் அமைப்புத்திருத்தம் சம்பந்தமாக ஜனாதிபதிக்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கிடையில் நடத்தப்பட்டுவரும் பேச்சு வார்த்தைகளில் இருவரும் மூன்று விடயங்கள் தொடர்பில் இரகசியமான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது. [மேலும்]
கறுப்பு ஜுலை சூத்திரதாரிகளில் ஒருவரே யாழ் மாவட்டத்தின் தற்போதைய இராணுவ தளபதி!
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 07:32.37 AM ]
ஈழத் தமிழர்களின் வாழ்வில் ஆழப்பதிந்த ரணங்களில் ஒன்றான கறுப்பு ஜூலை இனப்படுகொலைக்கு வித்திட்ட, 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மறைமுகமாக உதவினார் எனக் குற்றஞ்சுமத்தப்பட்டிருந்த இராணுவ அதிகரியே தற்போதைய யாழ் பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த அத்துருசிங்க எனத் தெரியவந்துள்ளது. [மேலும்]
4 இலட்சம் பேரை குடியேற்றி சிங்கள மாகாணமாக்க அரசு திட்டம்:த.தே.கூ
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 07:29.18 AM ]
வடமாகாணத்தைச் சிங்கள மாகாணமாக மாற்றி அங்கு இராணுவத்தினர் உட்பட அவர்களது குடும்பங்களுமாக சுமார் நான்கு இலட்சம் பேரை குடியேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அரச காணிகள் மட்டுமின்றி தமிழர்களது காணிகளும் சுவீகரிக்கப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு நாம் அறிக்கை கொடுத்தும் எதுவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. [மேலும்]
வடக்கு மாகாண சபை அலுவலகங்கள் உடனடியாக கிளிநொச்சிக்கு இடம்மாறா: 2011ல் தான் சாத்தியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 07:25.31 AM ]
திருகோணமலையில் இயங்கும் வடக்கு மாகாண சபை அலுவலகங்களை கிளிநொச்சிக்கு மாற்றும் செயற்பாடு 2011 ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
கனடாவின் பரிந்துரைக் குழு – சிறீலங்காவில் கண்டறிந்தது என்ன?
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 07:08.40 AM ]
ஜோதிரவி சிற்றம்பலம் என்ற நபரை இலங்கைக்குத் திருப்பியனுப்புவது தொடர்பான நிகழ்வில் கனடாவிலிருந்து குடிவரவு அமைச்சரிற்குப் பரிந்துரைப்பதற்காக சிறீலங்கா சென்று வந்த குழுவின் பரிந்துரைகள் என்ன என்பது தொடர்பான கேள்விகள் கனடா வாழ் தமிழார்வலர்களால் எழுப்பப்பட்டுள்ளன. [மேலும்]
கனிஷ்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் பகுதி நேர தொழில்களில் ஈடுபடுகின்றனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:08.19 AM ]
கனிஷ்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் பலர் பகுதி நேர தொழில்களில் ஈடுபட்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கையிடம் கடற்படைப் பயிற்சி பெற கோரிக்கை: லக்பிம
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:05.05 AM ]
அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இலங்கையிடம் கடற்படைப் பயிற்சியை கோரியுள்ளதாக லக்பிம பத்திரிகை பிரதான செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
நிறைவேற்று அதிகார பிரதமர் முறைமை தற்போதைக்கு அறிமுகப்படுத்தப்பட மாட்டாது : அரசாங்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:00.56 AM ]
தற்போதைக்கு நிறைவேற்று அதிகார பிரதமர் முறைமை அறிமுகப்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
தமிழர்கள் குறித்த இந்திய அரசின் நிலைப்பாட்டில் பெரும் மாற்றம்: செல்வம் அடைக்கலநாதன் எம்.பி செவ்வி
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 12:29.05 AM ]
கடந்த காலங்களை விட ஈழத் தமிழர் விடயத்தில் இந்திய அரசிடம் நிறைய வித்தியாசங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய அரசின் நிலைப்பாட்டில் நிறைய மாற்றங்கள் தென்படுகின்றன. இதனை அண்மைய எமது விஜயத்தின் போது எம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வம் அடைக்கல நாதன் எம்.பி. தெரிவித்துள்ளார். [மேலும்]
ராஜபக்ச அரசின் தூதரான அசினுக்குத் தடை விதிக்க வேண்டும்: மீனவர் சங்கங்கள்
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 05:02.23 PM ]
ராஜபக்ச அரசின் தூதராக செயல்படும் நடிகை அசின், நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்டோருக்கு தமிழ் திரையுலகம் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு, மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. [மேலும்]
பண்டாரநாயக்க குடும்பத்தை மஹிந்த அரசாங்கம் புறக்கணிப்பதாகக் குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 04:51.34 PM ]
இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல முக்கிய சீர்திருத்தங்களுக்குக் காரணமாக அமைந்த பண்டாரநாயக்கா குடும்பத்தை மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் புறக்கணிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
கொழும்பில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, இரண்டு பொலிஸார் பலி
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 02:52.26 PM ]
கொழும்பு, நாரஹென்பிட்டி பிரதேசத்தின், எல்விட்டிகல பகுதியில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, இரண்டு  பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement