செய்திகள்
(2ம் இணைப்பு)
ஐ.தே.க.வினர் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு: 15 நிமிடங்களின் பின் மீண்டும் உள்வருகை
[ செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009, 06:49.11 AM ]
ஒரு வாரத்துக்கு நான்கு நாட்கள் கூடுகின்ற நாடாளுமன்றம் ஒரு நாளாக குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சற்றுமுன்னர் வெளிநடப்பு செய்துள்ளனர். சபைக்கு முன்னால் சுமார் 15 நிமிடங்கள் வரை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அவர்கள் மீண்டும் சபைக்கு வந்து அமர்ந்துள்ளனர். [மேலும்]
மொன்றியலில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களிற்கு நினைவு வணக்க நிகழ்வு
[ செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009, 06:47.03 AM ] []
கனடா, மொன்றியலில் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களிற்கு நினைவு வணக்க நிகழ்வு 15.11.2009 ஞாயிறு மாலை மொன்றியலில் அமைந்துள்ள எவர்கிறீன் மண்டபத்தில் நடைபெற்றது.   [மேலும்]
த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினரின் புதல்வர், பாதுகாப்புச் செயலாளர் கொலை முயற்சியுடன் தொடர்பு : திவயின தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009, 05:27.08 AM ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் புதல்வர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை படுகொலை செய்யும் சதித்திட்டத்தில் தொடர்புபட்டிருப்பதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
பௌத்த பிரிவென் கல்வி நிலையங்களில் தமிழ் மொழி ஒரு பாடமாக கற்பிக்கப்படவுள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009, 05:21.58 AM ]
பௌத்த பிரிவென் கல்வி நிலையங்களில் தமிழ் மொழியை ஓர் பாடமாக கற்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் காலங்களில் பௌத்த பிக்குகளாக பயிற்சி பெற்றுக் கொள்ளும் தேரர்களுக்கு தமிழ் மொழி ஓர் பாடமாக புகட்டப்படவுள்ளதென அரசியல் சாசன அமைச்சு தெரிவித்துள்ளது. [மேலும்]
ஸ்ரீ.சு.க. விற்கும் ஜே.வி.பிக்கும் இடையில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை: அனுர குமார
[ செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009, 05:11.51 AM ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் இடையில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை என ஜே.வி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். [மேலும்]
அரசாங்கத்திற்கு சாதகமான நிலை காணப்படாதமையினால் தேர்தல் குறித்து ஜனாதிபதி அறிவிக்கவில்லை: கயந்த கருணாதிலக
[ செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009, 05:07.35 AM ]
அரசாங்கத்திற்கு பாதகமான சூழ்நிலை காணப்படுகின்றமையினாலேயே தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி எவ்வித அறிவிப்புக்களையும் விடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். [மேலும்]
மியன்மார் தலைவர் விமான நிலையத்திற்கு சென்றபோது கட்டுநாயக்கவில் ஆர்ப்பாட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009, 02:41.43 AM ]
இலங்கைக்கு வருகை தந்திருந்த மியன்மார் அதிபர் தன் சூ நாடு திரும்புவதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில், அவரது விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. [மேலும்]
சரத் பொன்சேகாவால் அரசுக்கு கடும் சவால்: ஏ.எவ்.பி. செய்தி ஆய்வில் தெரிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009, 02:23.17 AM ]
ஜெனரல் சரத் பொன்சேகாவினால் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முடியுமானால் எதிர்காலத்தில் தேர்தலில் அவர் அரசிற்கு கடும் சவாலாக விளங்குவார் எனவும், ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை வெளியிடாமைக்கு இதுவே காரணம் எனவும்  ஏ.எவ்.பி. செய்திச் சேவை கருத்துத் தெரிவித்துள்ளது. [மேலும்]
வெலிக்கடைச் சிறையில் நேற்று மாலை காவலர்கள் - தமிழ் கைதிகள் கைகலப்பு: உண்ணாவிரதிகள் இருவர் காயம்
[ செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009, 02:15.24 AM ]
வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் நேற்று மேற்கொண்ட உண்ணாவிரதத்தின் போது தமிழ் கைதிகளுக்கும் சிறைச்சாலை காவலர்களுக்கும் இடையில் கைகலப்பு இடம்பெற்றது. இச்சம்பவத்தில் உண்ணாவிரதமிருந்த இரண்டு தமிழ் கைதிகள் காயமடைந்து சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். [மேலும்]
ஜனாதிபதி மஹிந்த அடுத்த மாதம் யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார்
[ செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009, 02:06.00 AM ]
யாழ்.மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத்துணிகளையும், பாடப்புத்தகங்களையும் சம்பிரதாய பூர்வமாக வழங்குவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார் என்று அறியப்படுகிறது. [மேலும்]
போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு பற்றிய கொள்கை விளக்க உரை: தமிழீழ விடுதலைப்புலிகள் அறிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009, 01:56.23 AM ]
எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு பற்றிய கொள்கை விளக்கம் தொடர்பான உரை வழமை போன்று எதிர்வரும் மாவீரர் நாளன்று நிகழ்த்தப்படும் என தமிழீழ விடுதலைப்புலிகள் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
விசாரணைக்கென கூட்டிச் செல்லப்பட்டவர்கள் திரும்பி வருவதில்லை: முகாம் மக்கள் தமிழ் கூட்டமைப்பு பா.உறுப்பினர்களிடம் தெரிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 17 நவம்பர் 2009, 01:38.32 AM ]
எமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களை விசாரணைக்கென முகாம்களிலிருந்து கூட்டிச் செல்கின்றனர். ஆனால் அவர்கள் பின்னர் திரும்பி வருவதில்லை. அதனால்,எம்மையும் எந்த நேரத்தில் அழைத்துச் செல்வார்களோ என்ற அச்சத்துடனேயே வாழ்கிறோம் என இடம்பெயர் முகாம் மக்கள் கூட்டமைப்பு எம்.பிக்களிடம் தெரிவித்துள்ளனர். [மேலும்]
நோர்வே ஈழத் தமிழர் அவைக்கான ஐனநாயகத் தேர்தல் வெற்றிகரமாக நடந்தேறியது.
[ திங்கட்கிழமை, 16 நவம்பர் 2009, 07:57.29 PM ] []
நோர்வே ஈழத் தமிழர் அவைக்கான தேர்தல் நாடளாவிய ரீதியில் நடை பெற்றது. இலங்கைத்தீவில் இருந்து புலம் பெயர்ந்தாலும் தமிழீழ தனியரசுக்கான தேடலுடன் நோர்வேயில் வாழம் ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்ட இலட்சியப் பணயத்தினை ஐனநாயக வழியில் மக்களின் பரந்த பங்களிப்புடன் உறுதியாக முன்னெடுத்தும் செல்லும் நோக்கில் இந்த மக்களவையானது உருவாக்கம் பெற்றுள்ளது. [மேலும்]
முகாம்களில் வாழும் மக்களின் நிலைமை நெகிழ்ச்சி கொள்ளச் செய்தது: தமிழ் கூட்டமைப்பு பா.உ. செல்வம் அடைக்கலநாதன்
[ திங்கட்கிழமை, 16 நவம்பர் 2009, 04:49.25 PM ]
வவுனியா முகாம்களில் வாழும் மக்களின் நிலைமை தன்னை நெகிழ்ச்சி கொள்ளச் செய்ததாக அவர்களைச் சென்று பார்வையிட்டுத் திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். [மேலும்]
வவுனியாவில், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வாகன விபத்தில் காயம்
[ திங்கட்கிழமை, 16 நவம்பர் 2009, 04:35.03 PM ]
மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. [மேலும்]
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்